Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2024 21:27:48 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கொடல்லவத்த அவர்களுக்கு தளபதியின் பாராட்டு

பாதுகாப்புத் தலைமையக வளாக திட்ட முகாமைத்துவ பிரிவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் பீஎன் கொடல்லவத்த யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத்தில் 33 வருட காலத்திற்கு மேலான சிறப்புமிக்க சேவையை முடித்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் (14 பெப்ரவரி), இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியமைக்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி போரிலும் போருக்குப் பிந்தைய சூழ்நிலையிலும் அவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்பு கடமைகளை தளபதி நினைவு கூர்ந்தார்.

பதிலுக்கு, மேஜர் ஜெனரல் பீஎன் கொடல்லவத்த யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கும் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சிரேஷ்ட அதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டலுக்கும் நன்றி தெரிவித்தார்.

இராணுவத் தளபதி, சிரேஷ்ட அதிகாரியின் எதிர்காலத் திட்டங்கள், வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் சிரேஷ்ட அதிகாரியின் சேவைக்காலத்தில் வீட்டை விட்டு நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு ஆற்றிய விலைமதிப்பற்ற ஆதரவையும் அவர் பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலுக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் பீஎன் கொடல்லவத்த யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பாடநெறி இல. 08 மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றதுடன், அவர் 14 நவம்பர் 1992 இல் இலங்கை பொறியியல் படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். அவரது சேவைக்காலத்தில் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன், தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 04 பெப்ரவரி 2024 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது பாதுகாப்புத் தலைமையக வளாக திட்ட முகாமைத்துவ பிரிவு ஆமலதிக பணிப்பாளராக பதவி வகித்தார். அவர் 6 வது மற்றும் 7 வது இலங்கை பொறியியல் படையணியின் குழு கட்டளையாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 6 வது மற்றும் 8 வது இலங்கை பொறியியல் படையணியின் குழு கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் பிரிவில் பணிநிலை அதிகாரி 2 (அதிகாரிகள் பிரிவு) மற்றும் பணிநிலை அதிகாரி 2 (பதவி உயர்வு பிரிவு), 8 வது அதிரடிப் படையின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 68 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), இலங்கை பொறியியல் படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), 7 வது இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி கல்லூரியின் பயிற்சிப் பிரிவு பணிப்பாளர், 515 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் முதன்மை பணிநிலை அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பின்பற்றியுள்ளார். அவை இளம் அதிகாரிகள் பாடநெறி, பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, மோட்டார் போக்குவரத்து அதிகாரி பாடநெறி, படையணி நிர்வாக பாடநெறி, படையலகு புலனாய்வு அதிகாரி பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, ஆயுத மோதல் சட்டம் பயிற்றுவிப்பாளர்களின் பயிற்சி பாடநெறி, மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, உயர் இராணுவ தொழில்நுட்ப பரிச்சயப்படுத்தல் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, இளம் அதிகாரிகள் பாடநெறி - இந்தியா, ஒருங்கிணைந்த அதிகாரிகளின் வெடிகுண்டு செயலிழப்பு பாடநெறி - இந்தியா, இடைநிலை தொழிலாண்மை பாடநெறி – பாகிஸ்தான், சர்வதேச சுரங்க நடவடிக்கை தரநிலைகள் நிலை 3 வெடிபொருள் அகற்றும் பாடநெறி - ஐக்கிய இராச்சியம், சுரங்க மற்றும் வெடிப்பு நடவடிக்கைகளில் பொறியியலாளர் கட்டளை - சீனா மற்றும் பாலினம் சமூக அடிப்படையிலான அனர்த்த முகாமைத்துவ பாடநெறி - கின்யா.

மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைகள் டிப்ளோமா, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் இளங்கலை பட்டம் (பாதுகாப்பு ஆய்வுகள்) மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கல் முகாமைத்துவ முதுமானி போன்ற உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத பல பட்டப்படிப்புகளையும் சிரேஷ்ட அதிகாரி பின்பற்றியுள்ளார்.