Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2024 11:29:43 Hours

கேணல் டி.டி.டி. சேரசிங்கவின் "யுக யுக" வெளியீடு

இராணுவ பொலிஸ் படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் டி.டி.டி. சேரசிங்க அவர்களினால் எழுதப்பட்ட "யுக யுக" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 09) வெகுசன ஊடக நிலைய கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எசீஎ டி சொய்சா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.

வருகையின் போது, பிரதம அதிதியை ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மரியாதையுடன் வரவேற்றார், அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. சிரேஷ்ட பேராசிரியர் அத்தநாயக்க எம்.ஹேரத் சிறப்புரை ஆற்றியதுடன், விரிவுரையாளர் திரு. அஜித் கிருஷாந்த சேரம் அவர்கள் புத்தகத்தின் ஆய்வுரையினை நிகழ்த்தினார்.

பிரதம அதிதி தனது உரையின் போது, கேணல் டி.டி.டி. சேரசிங்க அவர்களுடனான தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், போர்க்காலத்தில் ஆசிரியரின் இலக்கியச் சிறப்பையும் பாராட்டினார்.

பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், "யுக யுக" நூல் அனுராதபுர இராச்சியத்தின் பெரிய கறுப்பு சிங்கம் என்று அழைக்கப்படும் மன்னன் வலகம்பா அவர்களின் வாழ்க்கை மற்றும் தலைமைத்துவத்தை கூறுகின்றது. சமகால போர் சூழ்நிலைகளுக்கு இணையாக உலகளாவிய மற்றும் மனவலிமை திறனை மையமாகக் கொண்டு, மன்னனின் தத்துவ அணுகுமுறையை புத்தகம் கூறுகிறது.

புத்தக வெளியீட்டு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.