Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2024 18:27:07 Hours

100 இராணுவப் பொறியியல் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் அங்கத்துவம்

இராணுவத்தில் பணிபுரியும் பொறியியல் அதிகாரிகள் குழுவின் இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதற்கான அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிகும் வகையில் இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் அங்கத்துவச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை 13 பெப்ரவரி அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது பெற்றுக்கொண்டனர்.

அதன்படி, இலங்கை இராணுவப் பொறியியல் படையணி, இராணுவ சமிக்ஞை படையணி, இராணுவ பொறியியல் சேவைகள் படையணி மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஆகியவற்றைச் சேர்ந்த 100 பொறியியல் தகைமை பெற்ற அதிகாரிகள், பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ, பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ. குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, பிரதம சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் பொறியியல் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் முனசிங்க யூஎஸ்பீ ஆகியோரிடமிருந்து சான்றிதழ்கள் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டனர்.

இராணுவ பொறியியல் பணியாளர்கள், இத்திட்டத்திலிருந்து பரந்த நிபுணத்துவத்துடன், இணையற்ற அறிவு மற்றும் திறன்களைக் பெற்றுக் கொண்டுள்ளனர். சேவைகள் முழுவதும் ஒத்துழைப்பு தேசிய இலக்குகளுக்கு இன்றியமையாததுடன் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இணக்கமான வேலை நிலைமைகள், அரசாங்கத் திட்டங்களுக்கு உதவுவதுடன், இலங்கை ஆயுதப் படைகளின் தொழில்முறை தரநிலைகள் மற்றும் போர் தயார்நிலைக்கு பெரிதும் பயனளிக்கும். இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி என்பது இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பொறியியலாளர்களுக்கான தொழில்முறை நிறுவனமாகும், இது பாதுகாப்பு அமைச்சின் கீழ் அத்தகைய விரும்பத்தக்க வெளியீட்டை அடைவதற்காக நிறுவப்பட்டது. தற்போது, 736 இராணுவ அதிகாரிகள் உட்பட, முப்படையைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொறியியல் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இச்சான்றிதழ் வழங்கும் விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.