Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2024 18:28:31 Hours

ஓய்வுபெரும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் முன்னாள் பிரதித் தளபதியான மேஜர் ஜெனரல் ஏ.பி.விக்ரமசேகர யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதன் மூலம் 34 வருட கால சிறப்புமிக்க பணியை முடித்தார். 13 பெப்ரவரி 2024 அன்று, சிரேஸ்ட அதிகாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களது சுமுகமான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி பல்வேறு பதவிகளில் இருந்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளைப் பாராட்டியதுடன், போர்க்களம் மற்றும் போருக்குப் பிந்தைய சூழ்நிலையின் அனுபவங்களை நினைவுகூர்ந்தார். மேஜர் ஜெனரல் ஏ.பீ விக்ரமசேகரவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் இராணுவத் தளபதி கேட்டறிந்ததுடன், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஏ.பீ விக்கிரமசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி அவரது அயராத சேவையை பாராட்டியதுடன், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். மேஜர் ஜெனரல் ஏ.பீ. விக்கிரமசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத்தில் தனது பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலுக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் ஏ.பீ. விக்கிரமசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 1990 ஜனவரி 09 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 33 இல் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றதுடன் அவர் 15 ஜூன் 1991 அன்று இலங்கை சமிக்ஞைப் படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 09 டிசம்பர் 2023 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்தப்பட்டார்.

அவர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் முன்னாள் பிரதித் தளபதியாக பணியாற்றியதுடன் மேலும் 4 வது இலங்கை சமிக்ஞை படையணியின் படை கட்டளையாளர் மற்றும் போக்குவரத்து அதிகாரி, 23 வது காலாட் பிரிகேட்டின் சமிக்ஞை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் அதிகாரி கட்டளை (நிர்வாக பிரிவு), 511 வது காலாட் பிரிகேடின் பிரிகேட் மேஜர், சமிக்ஞை படையணி தலைமையக நிறைவேற்று அதிகாரி, 4 வது சமிக்ஞை படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 61 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), மினுஸ்மா ஹட்டி ஐ.நா நடவடிக்கை படைக் குழுவின் பணிநிலை அதிகாரி, 9 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தில் பிரதம சமிக்ஞை அதிகாரி அலுவலகத்தின் பணிநிலை அதிகாரி 1, 10 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் கட்டளை அதிகாரி, 621 வது காலாட் பிரிகேட் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தொடர்பு ஆலோசகர், இராணுவ தலைமையக ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ தலைமையக ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டு பணிப்பகத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி மற்றும் இராணுவத் தலைமையக உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

படையலகு புலனாய்வு அதிகாரி பாடநெறி, அதிகாரி சிறப்பு தேர்ச்சி பாடநெறி, அதிகாரிகளின் செயல்பாட்டு பணிநிலை கடமைகள் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, பாதுகாப்பு இணைப்பாளர் திசைமுகப்படுத்தல் பாடநெறி, சமிக்ஞை அதிகாரிகள் அடிப்படை பாடநெறி - பங்களாதேஷ், இடைநிலை தொழிலாண்மை பாடநெறி – பகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகளின் தூண்டல் பயிற்சி பாடநெறி - ஹைட்டி.

சிரேஷ்ட அதிகாரி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய டிப்ளோமா, களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கற்கைகளில் முதுகலை, அமெரிக்கா கடற்படை பட்டப்பின் படிப்பு கல்லூரியில் முதுமானி பாதுகாப்பு ஆய்வுகள் (கொள்கை மற்றும் வியூகம்) போன்ற பல உயர் கல்விகளையும் பின்பற்றியுள்ளார்.