26th December 2023 22:51:00 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் டிசம்பர் 22 நத்தார் மற்றும் 2024 ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு வெலிகந்தை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அனைத்து நிலையினரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் நட்புறவு மற்றும் உணர்வுகளை தூண்டும் வகையில் கொண்டாடினர்.
ஏறக்குறைய, 300 வீரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிறுவர்கள் நத்தார் இசை நிகழ்ச்சியை நடாத்தினர். இதன்போது ஒரு இராணுவ தளத்தின் தனித்துவமான அமைப்பில் அனைத்து பிள்ளைகள், பெரியவர்கள் மற்றும் அனைத்து தரப்புகளும் ஒன்றாக கைகோர்த்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இந்த திட்டமானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அனைத்துப் நிலையினரின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
அன்றைய நிகழ்வில் பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு, இராணுவத்தினரின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். மற்றும் அவர்களது பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுக்கு அன்றைய இராணுவ ஏற்பாடுகள் சமூகத்தின் கண்ணுக்கு எட்டியதை விட அதிகம் என்பதை நிரூபித்தது.
மாலையில் அனைத்து இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கிழக்கு தளபதி உரையாடினார். நத்தார் தாத்தா பிள்ளைகளுக்கு நத்தார் பரிசுகளை வழங்கி முகாம் முழுவதும் மகிழ்ச்சியையும் நன்றியையும் வழங்கினர். இந்த எதிர்பாராத தருணங்கள் உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின.
மேலும், மாலையில் பங்கேற்ற அனைவருக்கும் சுவையான இரவு உணவு வழங்கப்பட்டது. பின்னர் மாலை கிழக்கு தலைமையகத்தில் நத்தார் இசை நிகழ்ச்சி, பிரபலமான மெல்லிசைகள் எதிரொலிக்கத் தொடங்கியதும் நிகழ்விற்கு மேலும் வண்ணம் சேர்தனர்.
பிரிகேடியர் எல்எச்எம் ராஜபக்ஷ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, பிரிகேடியர் ஆர்எஎச்எடி ஆரியசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ, பிரிகேடியர் கேஜீயூடி ஜயசிங்க, பிரிகேடியர் ஜேஎம்டிஎன்பி கருணாதிலக,கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.