Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2023 07:19:53 Hours

இலங்கையை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளின் ஒருங்கிணைந்த குழு யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்

சுவிட்சர்லாந்தின் தூதுவர் மேதகு கலாநிதி சிரி வால்ட், ஜப்பான் தூதுவர் மேதகு ஹிடேக்கி மிசுகோஷி மற்றும் தென்னாப்பிரிக்காவின் உயர் ஸ்தானிகர் மேதகு சடைல்ஷால்க் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த இராஜதந்திரிகள் குழு யாழ் குடாநாட்டுக்கான சுற்றுப் பயணத்தின் போது வியாழன் (டிசம்பர் 14) அன்று யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தது.

வருகை தந்த தூதுக்குழுவை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.

சுமூகமான சந்திப்பின் போது யாழ்.தளபதி மற்றும் விஜயம் செய்த தூதுக்குழுவினர் தற்போதைய சிவில்-இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள், சமூக நலசெயற்திட்டங்கள், பொருளாதார நிவாரண சேவைகள், சமூக அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இக் கலந்துரையாடலின் போது தூதுக்குழுவில் பல தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இறுதியில், அனைத்து இராஜதந்திரிகளும் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளவதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தமது எண்ணங்களை பதிவிட்டனர்.