14th December 2023 19:42:41 Hours
அம்பாறை 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் முயற்சியால் அம்பாறை எக்கல்லோய ஆரம்ப பாடசாலையின் 63 மாணவர்கள் புதன்கிழமை (டிசம்பர் 13) பாடசாலை உபகரணப் பொதிகளைப் பெற்றனர்.
எஸ்.என் மைக்ரோ கிரெடிட் பிரைவேட் லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக பணிப்பாளருமான திரு. ஏ. சுனில் மற்றும் அவரது துணைவியார் திருமதி சாந்தனி ஸ்ரீனிகேதி ஆகியோர் அனைத்து மாணவர்களுக்கும் பொருட்களை வாங்குவதற்கு தேவையான நிதியுதவியினை வழங்கினர். எழுதுபொருட்கள், பேனாக்கள், பென்சில்கள், பயிற்சி புத்தகங்கள், அச்சிடப்பட்ட வரைபடங்கள், வாசிப்புப் புத்தகங்கள் மற்றும் மேலதிக வாசிப்புப் பொருட்கள் அடங்கிய ஒவ்வொரு பொதியும் ரூபா 10,000/= பெறுமதியானது.
இத்திட்டம், மேலும் ஒரு சிவில் சமூகம் சார்ந்த நிகழ்வானதுடன் அப்பகுதியில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மாணவர்களுக்கு பயனளித்தது.
பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த வழங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தை ஒருங்கிணைத்த மேஜர் ஜெனரல் ஏஎஸ் ஆரியசிங்ஹ (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு அவர்களுடன் அனுசரணையாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.