07th December 2023 19:15:52 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 522 மற்றும் 523 வது காலாட் பிரிகேட் படையினர் சமூகம் சார்ந்த திட்டத்தின் கீழ் உலக மண் வள தினத்தை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி ஆணையிறவு முதல் கைதடி வரையிலான ஏ9 வீதியில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.
இத்திட்டத்தின் போது யாழ். - கண்டி (ஏ9) பிரதான வீதியின் இரு பக்கங்களையும் பிரதேசவாசிகளுடன் இணைந்து படையினர் சுத்தப்படுத்தினர்.