07th December 2023 19:30:55 Hours
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் 232 வது காலாட் பிரிகேடின் 4 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர், 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 91 மாணவர்களுக்கான கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர்.
குறித்த கருத்தரங்கு 2023 டிசம்பர் 05 அன்று கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 232 வது பிரிகேட் தளபதி மற்றும் 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆசிரியர்களால் நடாத்தப்பட்டு வருவதுடன், கருத்தரங்கு டிசம்பர் 9 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி வலய கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி), அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.