Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2023 17:40:35 Hours

வெளிசெல்லும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து வெளியேறும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனித் சுசில் அவர்கள் இலங்கையில் அவரது பதவிக்காலம் நிறைவடைந்து இந்தியா திரும்புவதற்கு முன்னர் வியாழக்கிழமை (நவம்பர் 30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பொதுவான நலன்கள் மற்றும் இரு இராணுவ அமைப்புகளுக்கு இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகள் தொடர்பாக இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

லெப்டினன் கேணல் புனித் சுசில் தனது பதவிக் காலத்தில் இலங்கை இராணுவத்திடமிருந்து கிடைத்த அனைத்து ஆதரவுகளுக்கும் நன்றி தெரிவித்ததோடு, இலங்கை இராணுவத்தின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சந்திப்பின் இறுதியில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவரது பதவிக்காலத்தில் அவரது உறவுகள் மற்றும் நல்லெண்ணங்களைப் பாராட்டி, அவருக்கு பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னம் வழங்கினார்.