Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2023 18:40:39 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி பல்லேகலை 5வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாமிற்கு விஜயம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் சனிக்கிழமை (21) பல்லேகலை 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் செய்தார்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ பதவி நிலைப் பிரதானியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், அவர் மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.

வருகை தந்த தளபதியை 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் யூஎம்டிசி தர்மசிறி அவர்கள் அன்புடன் வரவேற்றதுடன், 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர்களால் வளாகத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.

தனது விஜயத்தின் நினைவு சின்னமாக வளாகத்தில் மரக்கன்றினை நாட்டியதை தொடர்ந்து அனைத்து படையினர்களுக்கும் உரையாற்றியதுடன், குழுப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்