Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2023 18:20:39 Hours

24 வது காலாட் படைபிரிவினால் போதைப்பொருள் தடுப்பு குறித்து படையினர்களுக்கு தெளிவூட்டல்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் விபுல சந்திரசிறி ஆகியோரின் பணிப்புரையில் 'இராணுவத்தில் சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை (25) அம்பாறை மல்வத்தையில் உள்ள 24 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் விரிவுரையினை இராணுவ உள சுகாரதார பிரிவின் சிரேஷ்ட பிரதம அதிதியாக உளவியல் நிபுணர் பிரிகேடியர் ரொஷான் மொனராகல அவர்கள் தலைமையில் இராணுவ உள சுகாரதார பிரிவினரால் நடாத்தப்பட்டது.

இந்த விரிவுரையானது பொது மக்களால் பயன்படுத்தப்படும் சட்டவிரோதமான பொருட்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து தங்களை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பாக கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், இராணுவத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது மற்றும் போதைப்பொருள் மற்றும் அவற்றினால் ஏற்படும் விளைவுகள் குறித்து படையினருக்குக் கற்பிக்கப்பட்டது.

24 வது காலாட் படைபிரிவு மற்றும் அதன் பிரிகேட்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 14 அதிகாரிகள் மற்றும் 160 சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றினர்.