Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th January 2023 20:56:43 Hours

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் அடிப்படை பாடநெறி – 32 இல் சான்றிதழ் வழங்கல்

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டப் பணிப்பகம் வியாழக்கிழமை (ஜனவரி 26) குகுலேகங்கவில் உள்ள இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட அடிப்படை பாடநெறி-32 ஐ நிறைவு செய்தது.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் தினேஷ் உடுகம அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், பாடநெறியில் கலந்து கொண்ட அதிகாரிகளை நன்றி பாராட்டியதுடன் பாடநெறியின் போது வெளிப்படுத்தப்பட்ட அவர்களின் திறன்கள் மற்றும் திறமைகளைப் பாராட்டினார்.

ஜனவரி 09 தொடக்கம் 26 வரையான திகதிகளில் நடைப்பெற்ற இப் பாடநெறியில் மனித உரிமைகள், சிவில் சட்டம், அடிப்படை உரிமைகள், உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரங்கள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள் மற்றும் பங்கேற்பாளர்களை மதிப்பிடுவதற்கான தேர்வுகளுடன் கற்பித்தல் நடைமுறைகள் போன்ற விடயங்கள் பற்றி கற்பிக்கப்பட்டது.

38 இராணுவ அதிகாரிகள், 05 கடற்படை அதிகாரிகள் மற்றும் 04 விமானப்படை அதிகாரிகள் அடங்களாக இப் பாடநெறியில் 47 அதிகாரிகள் கலந்துகொண்டனர். இலங்கை கடற்படையின் லெப்டினன் கமாண்டர் கேஈ புத்திக அவர்கள் தகுதி வரிசையில் முதலாம் இடத்தை பெற்று விருது வழங்கும் நிகழ்வின் போது விசேடமாகப் பாராட்டப்பட்டார்.