Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2023 23:56:42 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் யாழ்ப்பாண இராணுவ முன்னாள் பேர் வீரருக்கு இறுதி மரியாதை

1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றி ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகார ஒருவரின் இறுதி ஊர்வலம் இராணுவ மரியாதையுடன் யாழ். கீரிமலை பொது மயானத்தில் புதன்கிழமை (ஜனவரி 25) இடம்பெற்றது.

1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தெல்லிப்பழை மாவேங்கல்லடியை வசிப்பிடமாகக் கொண்ட சார்ஜன்ட் சுந்தரம் அருளம்பலம் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 23) திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.

தனது பதவிக் காலத்தில் வீரமிக்க சிப்பாய் சுந்தரம் அருளம்பலம் அவர்கள் எமது தாய்நாட்டின் மீது தேசப்பற்றை வெளிப்படுத்தி இராணுவத்தினர் மற்றும் 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகளின் மனங்களையும் வென்றிருந்தார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரிஸ்வி ராசிக்கின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இராணுவ இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இறுதி ஊர்வலம் கீரிமலை மயான வளாகத்தை சென்றடைந்த போது மறைந்த அருளம்பலத்தின் பூதவுடலை படையினர் பொறுப்பேற்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக இறுதி மரியாதையினை வழங்கினர்.