Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2023 15:10:51 Hours

இராணுவத் தளபதிக்கு தனது பாடசாலை மாத்தளையில் வழங்கிய அமோக வரவேற்பு

இராணுவத்தின் 24வது தளபதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது பாடசாலை கல்வியின் போதான அழியாத நினைவுகளையும் தடங்களையும் மீட்டெடுக்கும் வகையில், மாத்தளை விஜய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் வியாழக்கிழமை (19) கல்லூரி வளாகத்தில் அவருக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.

கல்லூரியின் மாணவ சிப்பாய்களினால் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைகளுக்கமைய வரவேற்பு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வளாகத்திற்கு வந்தடைந்தவுடன் அதிபர் திருஏஎச் டபிள்யூ.ஆர்.தீக்க்ஷன, ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவ சங்க உறுப்பினர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

தொடர்ந்து கல்லூரி புத்தர் சந்நிதியில் மலர் வைத்து வணங்கியதுடன், 1886 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் மிக பழமையான முதற் பௌத்தக் கல்லூரியை நிறுவிய பௌத்த மறுமலர்ச்சியாளர் கேணல் ஹென்றி ஸ்டீல் ஒல்காட் அவர்களின் சிலைக்குஅஞ்சலி செலுத்தினார்.

பின்னர், தாய்நாட்டிட்காக உயிர் தியாகம் செய்த பழைய மாணவர்கள், காலம் சென்ற முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், அனைத்து பழைய மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கல்லூரி கீதம் இசைப்பதற்கு முன்பு சம்பிரதாய மங்கள விளக்கேற்றல் இடம் பெற்றது. தொடர்ந்து கலாசார மற்றும் அழகியல் நிகழ்வுகள் ஆரம்பமானது.

நன்றியுணர்வும் மரியாதையும் நிறைந்த ஒரு மனதைக் கவரும் நிகழ்வாக லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது பாடசாலை கால அதிபரான திரு.செனரத் பி அலகொட அவர்களை பிரதான மண்டபத்துக்கு அழைத்து சென்றார்.

சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பாடசாலை மாணவர் சிப்பாய் குழு உறுப்பினராகவும், சிரேஷ்ட மாணவ தலைவனாவும் பாடசாலை சாரணர் குழுவில் உறுப்பினராகவும், செயல்பட்டவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

அதிபர் திரு ஏ.எச்.டபிள்யூ.ஆர்.தீக்க்ஷன தனது அறிமுக வரவேற்பு உரையில் பாராட்டு விழாவின் நோக்கத்தையும், பழைய மாணவன் என்ற வகையில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் புதிய பதவியின் முக்கியத்துவத்தை விளக்கினார். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஐ.ஆர்.டபிள்யூ.கே ஜயசூரிய கலந்து கொண்டு உரையாற்றுகையில், கல்லூரிக்குள் வளர்க்கப்பட்டு நாட்டைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணித்த விலைமதிப்பற்ற தேசபக்தர்களை நினைவு கூர்ந்தார். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த முதியவர்கள் ஆகியோரும் அன்றைய பிரதம அதிதியின் முன் தங்கள் சிந்தனைகளைச் விரிவுரைத்தனர்.

ஒரு சுருக்கமான உரையை நிகழ்த்திய இராணுவத் தளபதி, கல்லூரியில் தனது காலத்தின் ஏக்கம் நிறைந்த நினைவுகளை நினைவு கூர்ந்தார், அது "அப்பமட்டநாமியந்தி" (தாமதமாகாதவர்கள் அழிவதில்லை) என்ற நேசத்துக்குரிய வாசகத்துடன் கைகோர்த்துச் சென்றது மற்றும் கல்லூரி வழங்கிய சிறந்த சேவைகளை நினைவு கூர்ந்தார். இளைய தலைமுறைக்கு ஒரு முழுமையான கல்வி, நாட்டில் சமாதான யுகத்தை ஏற்படுத்துவதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த கல்லூரி மாவீரர்களின் சேவைகள் மற்றும் தியாகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் மாணவர்களை முறையான கல்வி பெற ஊக்குவித்த ஆசிரியர்களின் சேவையை நினைவு கூர்ந்த அவர், இணை பாடத்திட்ட செயல்பாடுகளுடன் இணைந்து, மாணவர்களை தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ள உதவியது என்றார். மேலும், கல்லூரி மாணவர்கள் அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் தேசத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்றும், தனது கல்லூரி நாட்களில் அவர் திரட்டிய சிறந்த தலைமைத்துவ பண்புகளையும் வாழ்க்கைக்கான வலிமையையும் தந்தது என சுட்டிகாட்டினார்.

அரவணைப்பு மற்றும் பாசத்தால் ஈர்க்கப்பட்ட இராணுவத் தளபதி, மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாணவ சிப்பாய் பிரிவுக்கு பாதணிகள், நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகங்கள் வழங்கியதுடன், பாடசாலை அபிவிருத்திக்காக ஒரு தொகை நிதி பங்களிப்பையும் வழங்கினார்.

தற்போதைய இலங்கை சாரணர் சங்கத்தின் உப தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கல்லூரியில் செயலிழந்திருக்கும் சாரணிய குழுவை உயிர்ப்பிக்குமாறு அதிபரிடம் கோரிக்கை விடுத்தார். இந் நடவடிக்கையை அடையாளப்படுத்தும் வகையில் இராணுவத் தளபதி சாரணர் கொடியை அதிபருக்கு வழங்கி வைத்தார்.

தற்போது கல்வி கற்கும் மாணவர்களின் நல்வாழ்வில் தனது அக்கறையை வெளிப்படுத்திய இராணுவத் தளபதி, நான்கு பிள்ளைகள் கல்லூரியில் கல்வி கற்கும் குடும்பம் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் வீடமைப்புச் சிக்கல்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அக் குடும்பத்திற்கு மிகவும் தேவையான வீட்டினை இராணுவ உதவியுடன் வழங்க உறுதியழித்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

நிகழ்வின் இறுதியில் கல்லூரியின் பிரதி அதிபர் திரு. நவரத்ன பண்டா அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஆர்.எம்.எம்.ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு 11 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி என்டியு பிஎஸ்சி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, ஓய்வு பெற்ற முப்படைகளின் சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பழைய மாணவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.