Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2022 15:43:23 Hours

ஏயார் மொபையில் பிரிகேட் படையினரால் எம்பிலிப்பிட்டிய அனாதை குழந்தைகளுக்கு சுகாதார வசதிகள்

53 வது காலாட் படைப்பிரிவின் ஏயார் மொபையில் படையணியினர் வெளிநாட்டினரின் அனுசரணையுடன் எம்பிலிப்பிட்டியவில் உள்ள 'மெத் செவெனா' அனாதை சிறுவர் இல்லம் மற்றும் விசேட தேவைகளுடைய சிறுவர்களின் நலனுக்காக புதிய சுகாதார வசதிகள் மற்றும் சலவை அறைகள் என்பனவற்றை நிர்மாணித்து திங்கட்கிழமை (28) நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இத் திட்டமானது ஏயார் மொபையில் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபத் சஞ்சீவ, 53 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷானக ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், அமெரிக்காவில் வசிக்கும் நிதியுதவியாளரான திரு.சரத் களுபஹன மற்றும் திருமதி. பினிடி கலுபஹான அவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அதே நாளில், 'மெத் செவென' மற்றும் 'போதிராஜாராமய' சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்கு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சுவையான மதிய உணவு மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு இரு சிறுவர் இல்லங்களிலும் உள்ள நிர்வாகிகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் படையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.