Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2022 15:37:38 Hours

ஒழுக்கப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு ‘குற்ற அறிவியல்’ பற்றி கற்கை

ஒழுக்கப் பாதுகாப்பு பணிப்பகம் நவம்பர் 15-17 திகதிகளில் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தில் ‘குற்ற அறிவியல்’ தொடர்பான மூன்று நாள் செயலமர்வை ஏற்பாடு செய்தது.

இந்த மூன்று நாள் செயலமர்வில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படையினர் ‘கைரேகைகள்’, ‘ஆதாரங்களைப் பாதுகாத்தல்’, குற்றவியல் மற்றும் பிற பொதுவான அம்சங்கள், குற்றம் போன்றவற்றைக் கண்டறிவதன் தொழில்நுட்பம் குறித்து பெருமளவில் பயிற்றுவிக்கப்பட்டனர். களுத்துறை பொலிஸ் பாடசாலையிலுள்ள குற்றப் புலனாய்வுப் பயிற்சி வளாகத்தின் குற்றப் பதிவுப் பிரிவு மற்றும் தர்க்கவியல் பிரிவு அதிகாரிகள் இத்திட்டத்தின் போது தமது நிபுணத்துவம் மற்றும் விரிவுரை உதவிகளை வழங்கினர்.

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்களால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 13 ஒழுக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 102 சிப்பாய்கள் இச் செயலமர்வில் பங்குபற்றினர்.

ஒழுக்கப் பாதுகாப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் ஒழுக்கப் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் லக்ஷ்மன் பமுனுசிங்க, அவர்கள் கேணல் ஒழுக்கப் பாதுகாப்பு கேணல் சுஜீவ முனசிங்கவுடன் இணைந்து செயலமர்வை ஒருங்கிணைத்து அதன் நடவடிக்கைகளை நெருக்கமாக மேற்பார்வையிட்டார். அவர்கள் முதல் நாள் (15) அங்குரார்ப்பண நிகழ்விலும் இணைந்து கொண்டனர்.