Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2022 15:46:34 Hours

55 வது படைப்பிரிவின் படையினரால் யாழ். மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் விருத்தி

யாழ் குடாநாட்டில் உள்ள கெவில் மற்றும் கடைக்காடு கிராமங்களில் உள்ள மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் வகையில் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவு படையினரால் வடிவமைக்கப்பட்ட ஆங்கில மொழித் திறன் மேம்பாடு பாடநெறியின் மூலம் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் நிகழ்ச்சித் திட்டம் சனிக்கிழமை (16) ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்களின் ஆசீர்வாதத்துடன், 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஆங்கில பயிற்றுவிப்பாளர் கேப்டன் ரோஷினி ரணசிங்க அந்த வகுப்புகளை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 முதல் 11 மணி வரை 55 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துப்படி, அவர்களின் மொழித் தரம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் புலமை அதிகரிக்க உதவுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

75-80 மாணவர்கள் இவ்வகுப்புகளில் கல்வி கற்கிறார்கள். இராணுவத்தினரால் மாணவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.