Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2022 17:31:50 Hours

இராணுவத்தினர் இணைந்து சர்வதேச கரையோர சுத்தப்படுத்தும் வாரம் முன்னெடுப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலின் கீழ் இராணுவத்தினர் 2022 செப்டம்பர் 17-25, வரை சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் வாரத்தை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் பணியை முன்னெடுத்தனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் கீழுள்ள 513 பிரிகேடின் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து காரைநகர் கடற்கரைப் பகுதியில் ஷிரமதான பணியை மேற்கொண்டனர்.

அதேபோன்று, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 681 மற்றும் 682 வது பிரிகேட்களின் கீழுள்ள படையினர், கரையோர தூய்மைப்படுத்தல் விசேட வாரத்தை முன்னிட்டு, சாலை மற்றும் வேலையின் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.இந்த சிரமதானங்கள் அனைத்தும் அந்தந்த பாதுகாப்புப் படைத் தளபதிகள், படைப்பிரிவுத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள்,மற்றும் கட்டளை அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன.

இதற்கிடையில், மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழுள்ள 14 மற்றும் 61 வது படைப் பிரிவுகளின் படையினர் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் கடற்கரையை சுத்தம் செய்வதில் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.அதேபோன்று, சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தை முன்னிட்டு, கிழக்குப் பாதுகாப்புப்படை தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் கீழுள்ள 231 வது பிரிகேடின் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் சனிக்கிழமை (24) காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தினர்.

இந்த சிரமதானப்ப பணிகள் 23 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 231 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டன. 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் வய்.எம்.எ.பீ யாப்பா அவர்களின் தலைமையில் அவரது படையினரும் காத்தான்குடி பொதுமக்களும் இத்திட்டத்தில் இணைந்தனர்.

இதற்கிடையில், சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (23) மேற்கு பாதுகாப்பு படையின் 14 வது படைப்பிரிவின் கட்டளையின் கீழுள்ள 141 வது பிரிகேட் படையினர் நீர்கொழும்பில் இருந்து பொருதொட்டை வரையான சுமார் 3 கி.மீ. கடற்கரை பகுதியை சுத்தம் செய்வதில் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

நீர்கொழும்பு மாநகர சபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு அதிகார சபையின் தொண்டர்களுடன் 141 வது பிரிகேடின் 6 வது இலங்கை பீரங்கி படையணி, 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 2 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிப்பாய்கள் இப்பணியில் கலந்து கொண்டனர்.