Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2022 16:59:26 Hours

நேபாளத்தில் இராணுவ டேக்வாண்டோ அணிக்கு பதக்கம்

நேபாளத்தின் பொகாரா நகரில் செப்டம்பர் 22-25 வரை நடைபெற்ற 3 வது மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 6 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய இலங்கையின் தேசிய டேக்வாண்டோ பெடரேஷன் அணி வீரர்கள் 4 பதக்கங்களை வென்றனர், இதில் மூன்று பதக்கத்தினை இராணுவ வீரர்கள் பெற்றனர்.

10 பேர் கொண்ட தேசிய அணியில் பெண்கள் உட்பட 6 இராணுவ வீரர்கள் பிரத்தியேகமாக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பதக்கங்களை வெள்வதற்கு பங்களித்தனர்.

வெற்றியாளர்கள் பின்வருமாறு:

பம்ஸ் (தனி)

சார்ஜென் ஐ லக்ஷ்மன் - 12 வது கெமுனு ஹேவா படையணி (வெண்கலப் பதக்கம்)

கோப்ரல் HHR வணிகசேகர – 12 கெமுனு ஹேவா படையணி (வெண்கலம்)

ஸ்பார்ரிங் (ஒற்றை ஆண்)

லான்ஸ் கோப்ரல் ஏ.எம்.எஸ் பண்டாரநாயக்க -1 வது கஜபா படையணி (வெண்கலம்)

லான்ஸ் கோப்ரல் பீ.ஜி.எ.ஆர் குலசிறி – 8 வது இலங்கை சேவைப் படையணி

ஸ்பார்ரிங் (ஒற்றை-பெண்)

கோப்ரல் டபிள்யூ.சி ஸ்ரீமதி – 5 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி

லான்ஸ் கோப்ரல் வய்.கே.எம் மதுஷானி – 2 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி