Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2022 16:33:48 Hours

இராணுவத்தின் 73 வது ஆண்டு பூர்த்திவிழாவை முன்னிட்டு இந்து மத ஆசீர்வாத பூஜை

இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு விழா மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு இந்து மத பாரம்பரியத்திற்கமைவான ஆசீர்வாத பூஜை கொழும்பு 6 இல் அமைந்துள்ள மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் 26ம் திகதி பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ இந்து மத சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இராணுவ கொடி ஆலயத்தின் கருவறைக்குள் கொண்டுச் செல்லப்பட்டு ஆசிர்வாத பூஜை நிகழ்த்தப்பட்டது.

இராணுவ இந்து சங்கத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பூஜைக்காக இராணுவ கொடி ஆலயத்தின் பிரதம குருக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து ஆலயத்தின் மேள, தாள வாத்திய இசை மற்றும் மணிகளின் ஓசைக்கு மத்தியில் கொடிக்கு ஆசி வழங்கப்பட்டது

ஆலயத்தின் பிரதம குருக்களான சிவஸ்ரீ உதய ராகவ குருக்கள் தலைமையிலான அந்தணர் குழுவினரால் 73 வது இராணுவ ஆண்டு நிறைவு தினத்திற்கு முக்கியத்துவத்தையும் கண்ணியத்தையும் சேர்க்கும் வகையில் இராணுவ உறுப்பினர்களுக்கு ஆசிவேண்டி பூஜை நிகழ்தப்பட்டது.

மேலும் பழங்கள், நெய் மற்றும் மாலைகள் போன்றவற்றை தெய்வங்களுக்கு சமர்பித்து பாரம்பரிய 'ஆசிர்வாத' பூஜை இந்து மதத்தின் மிகவும் தெய்வீக சடங்குகளில் ஒன்றாக கருதப்படுகின்றதுடன், இராணுவத் தளபதியால் இராணுவக் கொடிகளில் மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டது.

இதன்போது லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் வழிபாடுகளின் நிறைவம்சமாக இராணுவத்தின் சகல உறுப்பினர்கள் சார்பில் ஆலயத்தின் மேம்பாட்டுக்கான நன்கொடையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். சகல கிரியைகளும் ஆலய அறங்காவலர்களுடன் இணைந்து பிரதம குருக்கள் சிவஸ்ரீ உதய ராகவ அவர்களினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

இராணுவ இந்து சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லால் விஜேதுங்க அவர்கள் பிரதம விருந்தினருக்கு வரவேற்பளித்ததோடு சிரேஸ்ட அதிகாரிகள் பலரது பங்கேற்புடன் வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இராணுவ பதவி நிலை பிரதானி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இந்து சமயத்தைச் சார்ந்த படையினர் பலர் இப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.