Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2022 17:00:00 Hours

கந்தகாடு பகுதியில் உள்ள இராணுவ பயிர்ச்செய்கையை விவசாய அமைச்சர் பார்வையிட்டார்

கிழக்கிற்கு விஜயத்தை மேற்கொண்ட கௌரவ விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள், சனிக்கிழமை (6) கந்தகாடு இராணுவப் பண்ணையில் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் சோளம் மற்றும் பச்சை மிளகாய் பயிர்ச்செய்கை பற்றிய நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு விஜயம் செய்தார்.

அங்கு விஜயம் செய்த அவர் , கந்தகாடு பண்ணையில் இராணுவத்தினர் பயிரிடும் பயிர் வகைகளை அவதானித்ததோடு, அங்கு பயிர் உற்பத்தித்திறன், சேதனை பசளையின் பயன்பாடு மற்றும் பருவகால பயிர்கள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கேட்டறிந்து கொண்டார். மற்றும் விவசாய அம்சங்களை மேம்படுத்துவதில் இராணுவத்தின் அர்ப்பணிப்பு தொடர்பாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

குறித்த விஜயத்தின் போது விவசாயம் மற்றும் கால்நடைப் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பி.எம்.டி.ஏ பெத்தேவெல ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.