Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2022 17:30:00 Hours

மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் பாடநெறி எண் 30 நிறைவு

மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் ‘எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வன போர்யுத்திகள் பாடநெறி இலக்கம் 30’ இன் மூன்று மாதகாலப் பயிற்சியைப் பெற்ற வெளிநாட்டவர்கள் மற்றும் முப்படை வீரர்கள் உட்பட 28 அதிகாரிகளைக் கொண்ட மேலும் ஒரு குழுவினர் தங்களது பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளனர்.

மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் திங்கட்கிழமை (1) இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிறைவு நிகழ்வில், இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கண்காணிப்புப் படைத் தளபதி கேணல் குமார ரணதுங்கமகே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் முடிவில் பாடநெறியில் கலந்துகொண்ட 28 பேரும் திறமைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். பாடநெறி 25 ஏப்ரல் 2022 அன்று ஆரம்பமானது.

இவ் 28 பாடநெறி அதிகாரிகளில் 2 பங்களாதேஷ் இராணுவ அதிகாரிகள், 2 இலங்கை கடற்படை அதிகாரிகள், 2 இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட படைப்பிரிவுகளின் அதிகாரிகள் அடங்குவர். கிளர்ச்சிக்கான அறக்கட்டளை தொகுதி, செயல்பாடுகளுக்கான கோட்பாடு, கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதம், உள் பாதுகாப்பு, கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் வன போர்யுத்திகள் மற்றும் சில நடைமுறை பணிகள் ஆகியவற்றை இப் பாடத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

இலங்கை கவச வாகன படையணியின் கெப்டன் எச்.ஜீ.ஆர்,டீ விஜேவர்தன பாடநெறியின் தகுதி வரிசையில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டார்.