Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd June 2022 19:16:26 Hours

இராணுவத் தளபதி ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தன அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு

33 வருடங்களுக்கும் மேலான இராணுவத்தின் சேவையை முடித்துக் கொண்டு, இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் பிரதித் தளபதியான கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தன அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் அவர்களின் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை (23) அழைக்கப்பட்டார்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தனவின் பணிகள் மற்றும் அர்ப்பணிப்புமிக்க பாத்திரங்களையும் மே 2009 க்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கள அமைப்பில் தனது சவாலான பாத்திரங்களை நினைவு கூர்ந்தார். அத்துடன் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடன் சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

பலவிதமான அலுவலகங்கள் மற்றும் நியமனங்களில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டன, இச்சந்திப்பின் போது இராணுவத் தளபதியால் அங்கு அவரது அலுவலகம் மற்றும் கடந்த 33 ஆண்டுகளில் நியமனங்களில் அவர் எவ்வாறு சிறப்பாகச் செய்தார் என்பதும் நினைவுகூரப்பட்டது.

ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததுடன், இராணுவத் தளபதி மற்றும் அவருக்கு முன்னால் கடமை ஆற்றிய அதிகாரிகளுடன் கடமைகளை நிறைவேற்றுவதில் தனக்குக் கிடைத்த ஊக்கம் பற்றிக் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தனவுக்கு பாராட்டு மற்றும் பாராட்டுச் சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கினார்.

அவரது மனைவி திருமதி என்.கே சுஜீவா பிரியதர்ஷனி மற்றும் அவர்களது மகள் மற்றும் மகனும் தளபதி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இடைநிலைக் கல்வியை முடித்த மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தன, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பாடநெறி இலக்கம் 11 இன் கீழ் பயிலிளவல் அதிகாரியாக சேர்ந்த, பின்னர் 1990 ஏப்ரல் 30 அன்று 5வது கஜபா படையணிக்கு நியமிக்கப்பட்டார்.

அவர் 5 வது (தொ) கஜபா படையணியின் குழு கட்டளை அதிகாரி, 5 வது(தொ) கஜபா படையணி உளவுத்துறை அதிகாரி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தின் பொதுப் பணி அதிகாரி 111 (பயிற்சி) 5 வது (தொ) கஜபா படையணி அணி கட்டளை அதிகாரி ,2 (தொ) கஜபா படையணி மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றின் இராண்டாம் கட்டளை அதிகாரியாகவும் 17 வது இலங்கை தேசியக் பாதுகாவலர் படையணி, 2 (தொ) கஜபா படையணி , 11 (தொ) கஜபா படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரியாகவும், கஜபா படையணி தலைமையகத்தின் தொடர்பு அதிகாரி, 142 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 57 வது படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் கேணல் பயிற்சி அதிகாரி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி ஆகிய பதவிகளை வகித்து போர் மற்றும் போரில்லா பகுதிகளில் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளார்.

போர்க்களத்தில் அவரது துணிச்சலுக்கான பணிகளுக்கு அவருக்கு ரண சூர பதக்கம் (RSP) விருது மற்றும் கார்யக்ஷம சேவை பதக்கம் (KSP) வழங்கப்பட்டது. இவர் இடைநிலைக் கல்வியை முடித்தவுடன், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிவிளவல் பாடநெறி இல 11 இல் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாவது லெப்டினன்னாக அதிகாரவாணை வழங்கப்பட்டு 5 வது கஜபா படையணியில் 30 ஏப்ரல் 1990 இல் நியமிக்கப்பட்டார் என்பது அறியத்தக்க விடயமாகும்.