Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2022 19:01:12 Hours

புதிய தளபதிக்கு சாலியபுரவில் கஜபா படையணியினர் இராணுவ சடங்குகளுடன் சிவப்பு கம்பள வரவேற்பு

அண்மையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணியின் தலைமையகத்தின் தளபதியாக இன்று (18) காலை இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பெறுப்பேற்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உள்வாங்கள் பாடநெறி-26 இல் உள்ள அதிகாரிகள் உட்பட அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களுக்களை தெரிவித்தனர்.சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தின் 24 வது இராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற அவர், கஜபா படையணியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த முதல் சந்தர்ப்பம் இது என்பதுடன் இராணுவ மரபுகளுக்கு இணங்க அவர் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்கப்பட்டார்.

வருகை தந்த இராணுவத் தளபதியவர்கள், பிரதி நிலை தளபதி கேணல் ராஜேந்திர விஜேரத்ன அவர்களினால் வரவேற்கப்பட்டதுடன், அன்றைய பிரதம விருந்தினரைக் கௌரவிக்கும் வகையில் கஜபா சிப்பாய்களால் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.அதனையடுத்து லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் வழிகாட்டியும் நிறுவனத்தின் தந்தையுமான மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் பொக்கிஷமான நினைவுகளை நினைவு கூர்ந்ததுடன் கஜபா படையணியின் தந்தையின் திருவுருவச் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.வருகை தந்த தளபதிக்கு அணிவகுப்பு மைதானத்தில் 20 பட்டாலியன்களை சேர்ந்த 560 கஜபா சிப்பாய்களினால் வண்ணமயமான மற்றும் பிரம்மாண்டமான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டமையானது அன்றைய நிகழ்வு மேலும் உச்சத்தை எட்டிது. அன்றைய பிரதம அதிதியை கஜபா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் விஸ்வாஜித் வித்யானந்த அவர்கள் வரவேற்றார்.

இராணுவத்தின் மிக உயர்ந்த இராணுவ மரியாதையாக கருதப்படும் அணிவகுப்பு மரியாதை அன்றைய பிரதம விருந்தினருக்கு வழங்கப்பட்ட இந்நிகழ்வு அழைப்பாளர்களாக இருந்த அனைவரையும் வியக்க வைத்தது. பின்னர் சிறப்பு மேடையில் இருந்து லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே இராணுவ மரபுகளுக்கு இணங்க மரியாதையை ஏற்றுக்கொண்டார். 24 வது இராணுவத் தளபதியாக அவர் கஜபா படையணி தலைமையகத்திற்குச் சென்றதன் நினைவம்சமாக, கஜபா படையணி நிலையத் தளபதியின் அழைப்பினை ஏற்று படையணி வளாகத்தில் நாக மரக் கன்று உன்றினை நட்டார்.

அதனையடுத்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.சில தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்சியின் போது, இராணுவத் தளபதியின் உள்வாங்கள் பாடநெறி-26 இன் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமையானது நிகழ்வு மேலும் மகிமைப்படுத்தப்பட்டது. மேலும் கஜபா படையணியின் குழு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.சிறிது நேரத்திற்குப் பிறகு, இராணுவத் தளபதியின் சொந்தப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், 4 வது கஜபா படையணி மற்றும் கஜபா தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளும் புகைப்படங்கள் எடுத்துக் கெளெ்வதற்காக சேர்ந்து கொண்டனர்.

அன்றைய நிகழ்ச்சியின் மேலும் ஒரு சிறப்பம்சத்தைக் காண அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் கூடியிருந்ததால், இந்த நாள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்கள் தலைமையகத்தின் முன்னாள் தளபதியின் இணையற்ற சேவையை வழங்கிய ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வெளியேற்றத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பதவி வெற்றிடமாகியதை அடுத்து, தலைமையகத்தின் புதிய தளபதியாக பதவியேற்க அழைக்கப்பட்டார்.மஹா சங்க உறுப்பினர்கள் 'செத்பிரித்' பரயாணங்களின் கோஷங்களுக்கு மத்தியில் படையணியின் புதிய கஜபா படையணியின் 12 வது தளபதியாக. லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் சுப நிமிடத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, புதிய அலுவலகத்தை இந்த நிகழ்வின் போது பொறுப்பேற்றார்.

இதனை தொடர்ந்து அனைவருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வு சுவாரஸ்யமானதாக காணப்பட்டது.இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இருவரும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஒரே உள்வாங்கள் பாடநெறி -26 ஐச் சேர்ந்தவர்கள், ஓய்வுபெற்ற ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள், இலங்கை இராணுவத் தொண்டர் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வின் போது கலந்துகொண்டனர்.