Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2022 21:12:26 Hours

பங்களாதேஷ் தேசிய தினத்தில் இராணுவ தளபதி பங்கேற்பு

பங்களாதேஷின் 51 வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தை முன்னிட்டு காலி முகத்திடல் ஹோட்டலில் சனிக்கிழமை (26) நடைபெற்ற வைபவத்தில் இலங்கையில் உள்ள தூதரகங்களின் இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

பங்களாதேஷின் உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கூட்டு இராணுவப் பயிற்சிகள், பரிமாற்றத் திட்டங்கள், தேசிய பாதுகாப்பு கல்லூரியில் மேலதிக பயிற்சி பாட இணைப்பு, பிஎஸ்சி படநெறிகள், தலைமைத்துவ நிகழ்ச்சிகள், வெற்றிகொள்ளும் வன போர் திட்டங்கள், ஆயுதப் பயிற்சி, பரசூட் பாடநெறிகள், உயர் உடற் பயிற்சி பாடநெறி மற்றும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை, பணியாளர்கள் ஆகியவற்றில் மேலும் பயிற்சி தொகுதிகள் , ஒதுக்கீடுகள் போன்றவற்றின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக இலங்கை ஆயுதப் படைகளிலுள்ள தமது சகாக்களுக்கு மிகவும் ஒத்துழைக்கும் பிராந்திய பாதுகாப்புப் பிரிவுகளில் ஒன்றாகத் தங்களின் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வருகையானது, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆயுதப் படைகளுக்கும் இடையில் பேணி வந்த நல்லெண்ணம் மற்றும் பணிபுரியும் உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதுடன் பங்களாதேஷின் தேசிய நலன்களுக்கும் அதன் மக்களுக்கும் இலங்கை ஆயுதப் படைகளின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்துகிறது.

பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் மாண்புமிகு தாரிக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம் மற்றும் அவரது துணைவியார் இணைந்து ஹோட்டல் காலி முகத்திடலில் வருகைதந்த அதிதிகளை வரவேற்றதுடன் அவர்களுடன் சுமூகமாக உரையாடினர்.

பல உயர்ஸ்தானிகராலயங்களின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர்.