Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2022 00:25:47 Hours

இராணுவத் தளபதி துப்பாக்கி சூட்டு பயிற்சிப் பாடசாலையில் நன்கு ஒழுக்கமான துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துதல்

'ஸ்னைப்பர்களின் இல்லம்' என்று வர்ணிக்கப்படும் தியத்தலாவ இராணுவ துப்பாக்கி சூட்டு மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கிச் சூட்டு போட்டி - 2021 இன்று பிற்பகல் (29) நிறைவடைந்தது. இந்நிகழ்வுகளின் பரிசளிப்பு விழாவிற்கு, துப்பாக்கி சூட்டு பயிற்சிப் பாடசாலையின் தளபதியும் சிறு துப்பாக்கிகள் சங்க தலைவருமான பிரிகேடியர் விபுல இஹலகே அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இராணுவத்தின் முன்னோக்கிகு மூலோபாய திட்டம் 2020 - 2025'க்கு இணங்க, திறந்த, சேவைப் படையணிகள் மற்றும் புதியவர்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2021 போட்டிகளில் அனைத்துப் படையணிகளையும் சார்ந்த 340 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட்டனர். திறந்த கஜபா படையணி போட்டியில் வெற்றிக் கேடயத்தையும் முறையே கெமுனு ஹேவா படையணி மற்றும் கமாண்டோ படையணி 2வது மற்றும் 3வது இடத்தினை பெற்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகிய போட்டிகள் சனிக்கிழமை (29) வரை நடைபெற்றன இப்போட்டியில் பெண்கள் அணி ஒன்று உட்பட சேவைப் படையணிகள் மற்றும் புதியவர்கள் பிரிவுகளில் 34 அணிகள் போட்டியிட்டன.

சேவைப் படைப்பிரிவுகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் கைப்பற்றினர், அதில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 2 ஆம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்.. புதியவர்கள் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டில் கெமுனு ஹேவா படையணி துப்பாக்கி சுடும் வீரர்கள் வென்றனர் மற்றும் இரண்டாம் இடத்தை முறையே கஜபா படையணி மற்றும் கமாண்டோ படையணியின் துப்பாக்கி சுடும் வீரர்கள் பெற்றனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் துப்பாக்கி சூட்டு பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் விபுல இஹலகே ஆகியோர் இணைந்து அன்றைய பிரதம அதிதியை , துப்பாக்கி சுடும் பயிற்சிப் பாடசாலைக்கு வரவேற்ற பின்னர், அன்றைய பரிசளிப்பு விழா ஆரம்பமானது. முதலில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, அந்த போட்டியில் பங்குப் பற்றிய குழுக்களின் திறன்களை காட்டிசப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூட்டு களத்திற்கு அழைக்கப்பட்டார்.

அன்றைய நிகழ்வின் பரிசளிப்பு விழா ஆரம்பமாகிய பின்னர் துப்பாக்கி சூட்டு பயிற்சிப் பாடசாலை தளபதியும் இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவருமான பிரிகேடியர் விபுல இஹலகே வரவேற்பு உரையை நிகழ்த்தினர் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு அன்றைய முக்கியத்துவம் மற்றும் போட்டிகள் எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் ஆர்வத்துடன் நடத்தப்பட்டன என்பது குறித்து விளக்கினர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் பரிசு கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினத்தின் பிரதம அதிதி சாதனையாளர்களை வாழ்த்திய பின்னர் விருதுகளை வழங்கி வைத்தார்,மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவ பதவி நிலை பிரதானி , இராணுவ பிரதிப் பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தொண்டர் படையணி தளபதி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் விருது வழங்கலில் பங்குப்பற்றினர்.

திறந்த போட்டியில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஜே.ஏ.ஐ. பி ஜயலத் தெரிவு செய்யப்பட்டார். சேவைப் படையணி பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கெப்டன் பி.ஏ.டி.யு.எல் ஆராச்சிகேயும் புதியவர்களுக்கான பிரிவில் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராக ஜே.சி.என் வீரசிங்கவும் தெரிவு செய்யப்பட்டனர். திறந்த போட்டி பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கஜபா படையணியின் வீரர்கள் வென்றனர். அதேபோன்று, மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன, மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, பிரிகேடியர் ஜி.ஜி.எ குணசேகர மற்றும் பிரிகேடியர் சில்வா ஆகியோர் மேஜர் ஜெனரல் மற்றும் பிரிகேடியர் நிலைப் போட்டிகளில் பரிசு கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனர்.

அதேபோன்று, பிரிகேடியர் ஜே.எம்.எஸ்.ஜி.எம்.ஜயமஹா, பிரிகேடியர் டி.பி வெலகெதர மற்றும் பிரிகேடியர் ஆர்.பி முனிபுர ஆகியோர் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜெனரல் ஷவேந்திர சில்வா, 'சிப்பாய்களின்' இன்றியமையாத ஒருங்கிணைந்த கூறுகள், 'ஒழுக்கம்' மற்றும் 'அர்ப்பணிப்பு' ஆகியவை சிப்பாய்களின் உடல் மற்றும் மன கடினத்தன்மையுடன் இருக்கும் என்று எடுத்துக்காட்டினார். தேவை ஏற்படும் போது போர் துப்பாக்கிச் சூடு நடத்தத் தயாராகும் நேரம், அது அவரை ஒரு முழு அளவிலான இராணுவ வீரராகத் தகுதிப்படுத்துகிறது. "எந்தவொரு சவாலான சூழலிலும் எந்தவொரு சவாலுக்கும் சவால் விடக்கூடிய மிகவும் வலிமையான செயலணியாக இலங்கை இராணுவம் விளங்குகின்றது. , ஒரு சிப்பாய் தனது ஆயுதத்துடன் தகுதி பெறத் தவறினால், அவர் எந்த ஆயுதத்தையும் எடுத்துச் செல்லவோ அல்லது சுடவோ அனுமதிக்கப்படமாட்டார். எனவே, தொடர்ச்சியான நேரடி பயிற்சிகள் தடையின்றி தொடர வேண்டும், அதே நேரத்தில் சுய ஒழுக்கத்தை மேலும் மேம்படுத்துதல் மற்றும் அவரது வாழ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்ட பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்ற அர்ப்பணிப்பு போன்ற விடயங்கள் முக்கியமானவை என குறிப்பிட்டார்.

இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் செயலாளர் மேஜர் எ. ரணசிங்க நன்றியுரையை வழங்கிய பின்னர் பொழுதுபோக்கு அம்சங்கள் அன்றைய நிகழ்வுகளை வண்ணமயமாக்கியன. பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, இலங்கை தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

போட்டியாளர்கள் 9 கிமீ ஓட்டத்தை முடித்தவுடன் 300 மீ களத்தில் 10 ரவைகளும், 200 மீ களத்தில் 20 ரவைகளும், 100 மீ களத்தில் 10 ரவைகளும் மற்றும் 50 மீ களத்தில் 10 ரவைகளும் சுட்டு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இப்போட்டியானது துப்பாக்கிச் சூடு திறன், படையலகின் அனைத்து நிலைகளுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்காகவும், இராணுவ சிறு ஆயுத சங்கம் (ASAA) மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தகுந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டும் நடாத்தப்படுகின்றது.