Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2022 08:55:47 Hours

இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் தெரிவானவர் தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட திரு சுரேஷ் சுப்ரமணியம் தேசிய விளையாட்டுத் தெரிவுக் குழுவின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை (21) நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஒலிம்பிக் விளையாட்டுத் துறையின் மிகவும் உயர்வான பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தோடு, தடகள போட்டித்துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற உள்ளவர்களின் நிலை என்பன தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் போது, கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் காலத்தின் போது, தடகள வீரர்கள் ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கிய ஆதரவிற்கு திரு சுரேஷ் சுப்ரமணியம் இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்ததோடு, இதனால் வீரர்களின் மன உறுதி அதிகரித்ததோடு அதனை தவறவிட்டிருந்தால் அவர்களுக்கு பெரும்பாலான சர்வதேச போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியிருக்காதெனவும் திரு சுரேஷ் சுப்ரமணியம் சுட்டிக்காட்டினார்.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது கடற்படை மற்றும் விமானப்படை என்பவற்றுடன் இணைந்து இராணுவ விளையாட்டு வீரர்கள் வழங்கும் ஒத்துழைப்பிற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திரு. சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் ஒலிம்பிக் குழு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகிய தரப்புக்கள் இராணுவம் மற்றும் அதன் சகோதரச் சேவைகளுக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் இராணுவ தளபதி நன்றி தெரிவித்தார்.

சந்திப்பின் நிறைவில், திரு சுரேஷ் சுப்ரமணியம், ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ஒலிம்பிக் குழுவின் நினைவுச்சின்னத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். அதனையடுத்து, இராணுவத் தளபதி இராணுவத் தலைமையகத்திற்கு அவரது விஜயத்தைப் பாராட்டி அவருக்கு இராணுவ தளபதியால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது ஒலிம்பிக் குழுவின் மற்றுமொரு அதிகாரிகயும் திரு சுரேஷ் சுப்ரமணியம் அவர்களுடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.