Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2022 09:00:01 Hours

2022 சிறுபோகத்திற்கான சேதன பசளை உற்பத்தி செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் பசுமை விவசாய செயற்பாட்டு நிலையத்தில் ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்திற்கான சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான கூட்டம் ராஜகிரியவிலுள்ள பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தில் இன்று (19) காலை அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதாயினியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பங்குதாரர்கள், ஜனாதிபதி செயலணியின் உயர்மட்ட அதிகாரிகளின் நேரடி பங்கேற்புடன் இடம்பெற்ற இராணுவத்தின் முதலவாது ஒருங்கிணைப்பு கூட்டம் இதுவாகும்.

இந்த முதல் சந்திப்பின் போது விவாசய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.எச்.எஸ் அஜந்த டி சில்வா, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஏஎச்எம்எல் அபேரத்ன ஆகியோருடன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் பங்குதாரர்களால் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளின் நோக்கங்கள் தொடர்பில் விவரிக்கப்பட்டது.

பசுமை விவசாய செயற்பாட்டு நிலையத்தின் தலைவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை தொடர்ந்து 2022 சிறுபோகத்தை வெற்றிகரமான முன்னெடுப்பதற்கான சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளுக்கான திட்டமிடல் அடங்கிய வரைபடம் தொடர்பிலும் பங்குதாரர்கள் மற்றும் முகவர்களை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டின் சிறுபோகத்திற்கான விளக்க வரைபடைங்கள் ஏற்கனவே அரசாங்க மற்றும் பிற நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அதிமேதகு ஜனாதிபதியவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூலோபாய திட்டமிடல் தொடர்பிலான வரைப்படத்தில் 2022 சிறுபோகத்தின் போது பயிரிடும் மொத்த நிலப் பரப்பின் அளவு, அவசியமான பயிர் மற்றும் சேதன பசளையின் அளவு மற்றும் ஒப்பந்ததாரர்களின் ஈடுபாடு ஆகியவை தொடர்பிலான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப பசளை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும், அதன் தரம் தொடர்பில் ஆராய்வது தொழில்நுட்ப வல்லுனர்களின் செயற்பாடு என்பதால் முகவர்களுக்கான அங்கிகாரம் வழங்கும் செயற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை. அதேநேரம், முழு நாட்டிற்கும் ஒரே முகவரை மாத்திரம் தெரிவு செய்யமால் மாவட்ட அடிப்படையில் முகவர்களை வேறுபடுத்திகொள்வதால் அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் எளிதாக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பசுமை விவசாய செயற்பாட்டு பொறிமுறைக்குள் அனைத்து மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை கண்காணிக்கும் பணி முதலாம் படையணியின் தளபதி மற்றும் ஏனைய 6 பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகளால் முன்னெடுக்கப்படும் அதனால் எந்தவொரு தரப்புக்கும் பாதிப்புக்கள் ஏற்படாது என்பதோடு, விவசாயிகளின் உற்பத்திச் செயற்பாடுகள் மற்றும் விவசாய துறைசார் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை மாத்திரமே இராணுவம் வழிநடத்தும் என்றும் தெரிவித்தார்.

அதனையடுத்து கலாநிதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எச்.எஸ். அஜந்த டி சில்வா,2022 சிறுபோக உற்பத்திக்கான திட்டமிடல்கள் தொடர்பில் விளக்கமளித்த பின்னர் ஆளணி வளம் மற்றும் ஏனைய ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளுக்கு இராணுவம் வழங்கும் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், 4 மாதங்கள், 3 ½ மாதங்கள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விளைச்சலுக்கான பசளையின் அவசியம் தொடர்பில் விளக்கமளித்த அதேநேரம் தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் என்பவற்றின் முக்கியத்தும் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மற்ற அனைத்து பங்குதாரர்களும் இணையவழி தொழல்நுட்பம் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பங்குதாரர்கள், ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள், விவசாய திணைக்கள அதிகாரிகள், இராணுவ தலைமையகத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே மற்றும் இராணுவ அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.