Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th January 2022 21:06:55 Hours

1 வது விமானப்படைத் தளபதியின் பூதவுடலுக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அஞ்சலி

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கல்கிசையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் வைக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 1வது தளபதி எயார் சீப் மார்ஷல் பீஎச் மெண்டிஸ் அவர்களின் பூதவுடலுக்கு இன்று (19) அஞ்சலி செலுத்தினார்.

1972 அரசியலமைப்பு திருத்தத்திற்கு பின்னர் தற்போது விமானப் படையென அழைக்கப்படும் அப்போதைய ரோயல் சிலோன் விமானப்படையின் 4 வது தளபதியாகவிருந்த எயார் சீப் மார்ஷல் பீஎச் மெண்டிஸ்(ஓய்வு) FBIM, idc, psc, qfi செவ்வாய்க்கிழமை (18) காலமானார்.

மறைந்த விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மெண்டிஸின் விவரம் வருமாறு,

"பேடி மெண்டிஸ்" என அறியப்படும் (ஓய்வு) ஏர் சீப் மார்ஷல் பத்மன் ஹரிபிரசாத மென்டிஸ் 1933 ஜனவரி 24 ஆம் திகதி பிறந்தார். அவர் புதிதாக உருவாக்கப்பட்ட Royal Ceylon Air Force (RCyAF) இன் ஐந்தாவது புதியவராக 1951 ஓகஸ்ட் 8 ஆம் திகதி இணைந்துகொண்டார். கெடட் அதிகாரியாகவிருந்த காலத்தில் மெண்டிஸ் கிராண்வெல்லில் உள்ள புகழ்பெற்ற ரோயல் விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார். 1959 ஆம் ஆண்டில், பிளைட் லெப்டினன்ட் மெண்டிஸ் குளூசெஸ்டர்ஷையரில் உள்ள “RAF லிட்டில் ரிசிங்டன்” மத்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கு தகுதி பெற்ற முதல் இலங்கையரும் இவராவார்.

எயார் சீப் மார்ஷல் மெண்டிஸ் விமானி அதிகாரி பதவியில் இருந்து எயார் கொமடோர் வரை நிலை உயர்வை அடைந்தார். 1971 ஜனவரி 1 ஆம் திகதி ரோயல் சிலோன் விமானப்படையின் 4 வது தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் ரோயல் சிலோன் விமானப்படைக்கு கட்டளையிட்ட முதல் இலங்கை அதிகாரி ஆவார். பின்னர் அதே அமைப்பில் தனது தொழில்முறை வாழ்க்கையை ஆரம்பித்த அவர், 1972 இல் சிலோன் குடியரசாக மாறியதுடன், ரோயல் சிலோன் விமானப்படையானது அதன் முழு அடையாளத்துடன் இலங்கை விமானப்படை என அதன் பெயரை மாற்றிக்கொண்டது. இதனால் எயார் வைஸ் மார்ஷல் பீஎச் மெண்டிஸ் இலங்கை விமானப்படையின் முதலாவது தளபதியாகினார். அவர் 1976 இல் இலங்கை விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மறைந்த விமானப்படைத் (ஓய்வு) தளபதி பி.எச்.மென்டிஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் முழு இராணுவ மரியாதையுடன் தெஹிவளை - கல்கிசையில் உள்ள ‘நிசல செவன’ மயானத்தில் இடம்பெற்றது. (தகவல் - www.slaf.lk)