Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2021 13:50:16 Hours

ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) எழுதிய ‘அமைதியை இழந்த மோதல்’ என்ற நூல் இராணுவத் தளபதியிடம் கையளிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், 17 வது இராணுவத் தளபதியுமான ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) அவர்கள் எழுதிய ‘அமைதியை இழந்த மோதல்’ (The Conflict that Eluded Peace) என்ற நூலின் பிரதி பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வாவிடம் இராணுவத் தலைமையகத்தில் புதன்கிழமை (1) கையளிக்கப்பட்டது.

நாட்டைப் பிரிப்பதற்காக 30 ஆண்டுகால பயங்கரவாத மோதலின் போது ஆயுதமேந்திய ஆயுதப்படை, சிவில் பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸ் வீர பிள்ளைகளின் துணிச்சலை நினைவுபடுத்தும் ஒரு விரிவான தலைசிறந்த நூலில் 'அமைதியைத் தவறவிட்ட மோதல்' என்ற தலைப்பில் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி வெற்றிக்கு வழிவகுத்த நினைவுகள் உள்ளடங்கப்பட்டுள்ளன.

பின்னர், ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்த எழுத்தாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) அவர்களுக்கு அன்பான வரவேற்பை வழங்கியதுடன், இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இராணுவ தளபதிக்கு புத்தகம் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பான கருத்துப் பரிமாற்றம் செய்தார். சமாதானத்தை விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் இறுதியாக வெற்றியைக் கொண்டு வந்த மனிதாபிமான நடவடிக்கையின் சில முக்கியமான தருணங்களையும் அவர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு நினைவுபடுத்தினார். அதன் பின்னர், நூலாசிரியர் தனது நூலின் பிரதியை பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வழங்கினார்.

இவரின் இத் திட்டத்தைப் பாராட்டியதுடன், இலங்கை இலேசாயுத படையணியின் சிரேஷ்ட எழுத்தாளரும் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத தாக்குதலின் போது அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், இலங்கைப் போர்வீரர்களால் நாட்டிற்கு அமைதி கிடைத்தமைக்கும் நன்றி தெரிவித்தார்.

பயங்கரவாத போரின்போது சமரசமற்ற மனப்பான்மையால் பாரிய அளவில் மோதல்கள் அரசியல் தீர்வுக்கு பதிலாக இராணுவத் தீர்வின் மூலம் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதைக் காட்டும் இந்தப் நூல் என்பதை இந் நூல் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் போது இலங்கை அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தின் 17 வது தளபதியுமான ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு), ஓய்வுபெற்று 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையைக் கொண்டிருந்த அவர், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பிரேசில் மற்றும் தாய்லாந்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல இராஜதந்திர பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.