Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2021 13:00:45 Hours

24 வது படைபிரிவு படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அம்பாறை மாவட்டத்தில் பெய்த கடும் மழைக்குப் பின்னர் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.

24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவாவின் பணிப்புரையின் பேரில் படையினர் நிந்தவூர், அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுகளில் குறிப்பிட்ட கிராம சேவை பிரிவுகளில் இச் செயற்திட்டத்தை முன்னெடுத்தனார்.