Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2021 16:00:00 Hours

கிழக்கு படையினர் பொத்துவில் பிரதேச வயதான வறிய தம்பதியினருக்கு வீடு வழங்கல்

கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 242 வது பிரிகேட்டின் 23 வது இலங்கை சிங்க படையினரால் பொதுமக்களுக்கு தேவையான வீட்டு கட்டுமான திட்டத்தை விரிவுபடுத்தி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு அதுை ஜயசிங்ஹ அவர்களின் அணுசரனயில் மேலும் ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.

24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அனுசரணையாளின் மூலப்பொருட்களை கொண்டு 23 ஆவது இலங்கை சிங்கப் படையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி சில வாரங்களுக்குள் அந்த வீட்டை நிர்மாணித்தனர். 23 ஆவது இலங்கை சிங்கப் படையின் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் திலும் விஜேதிலக்க இந்தத் திட்டத்தை நிறைவு செய்யும் பணியில் தீவிரமாகப் பங்குபற்றினார்.

பயனாளியான இல. 02 விக்டோரியா வத்த, செங்கமுவ, பொத்துவில், என்ற விலாசத்தில் தனது மனைவியுடன் திரு.பி.சண்முகம் வீடற்ற நிலையில் வாழுகின்றமை படையினர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமைமையை அடுத்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய பிரதம அதிதியாக செவ்வாய்க்கிழமை (19), இந்து சமய மரபுகளைப் பின்பற்றி நடந்த விழாவில் கலந்துக் கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தார். வீட்டு உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொதியுடன் புதிய வீட்டின் சாவியை பிரதம விருந்தினர் அடையாளப்பூர்வமாக ஒப்படைத்தார். பாரம்பரிய மங்கள விளக்கேற்றல் பெயல் பலகை திரை நீக்கம் என்பனவும் நிகழ்வில் இடம்பெற்றன.

அந் நிகழ்வின் அடையாளமாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய புதிய வீட்டின் வளாகத்தில் ஒரு தென்னங்கன்றை நாட்டினார். இத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனுசரணையாளர்கள் மற்றும் படையினருக்கு அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். இவ் நிகழ்வில் 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா, 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ் மற்றும் பல அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.