Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2021 08:09:18 Hours

பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு இணைப்பாளர் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பயிற்சி செயற்பாடுகளை கண்காணிப்பு

எக்ஸர்சைஸ் கொமோரண்ட் ஸ்ட்ரைக்- XI 2021' என்ற களப் பயிற்சி இப்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. வான்வழி பிரிகேட் சிப்பாய்களால் புதன்கிழமை (22) கிழக்கு ஆசிய விடுதலைப் போராளிகள் பயங்கரவாத அமைப்பின் (ELF) மற்றொரு முக்கிய தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

கிழக்கு ஆசிய விடுதலைப் போராளிகள் பயங்கரவாத அமைப்பின் (ELF) முக்கிய தளமாக அடையாளம் காணப்பட்டிருந்த இந்த தளமானது கிழக்குத் துறையின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ஆதவு வழங்க கூடிய பயங்கரவாதிகள் முன்பு இருந்துள்ளனர். பாதுகாப்புப் படைகளின் தாக்குதல்களுக்குப் பின் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வான்வழி பிரிகேட் படையினர் தாக்கி அழித்த இந்த தளத்தில் 'டோனி பிராஸ்கோ' என அடையாளம் காணப்பட்ட பாயங்கரவாத தலைவர்களின் ஒருவரால் கட்டளையுடன் 26 – 28 பயிற்றப்பட்ட பயங்கரவாதிகள் டி -56 தானியங்கி துப்பாக்கிகள், எல்எம்ஜி, ஆர்.பி.ஜிகளுடன் மீண்டும் வன்முறையைக் கட்டமைக்க மறுசீரமைக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்தது.

அதே வேளை பயிற்சி கொமோரண்ட் ஸ்ட்ரைக் XI 2021' பயனுள்ள முறையில் இருந்தபோது, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதரக பாதுகாப்பு இணைப்பாளர், கேர்ணல் முஹம்மது சப்தார் கான் மற்றும் (தலைமை கண்காணிப்பாளர்) லெப்டினன்ட் கமாண்டர் பாபர் நிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) காலை மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தின் கள பயிற்சி கட்டுப்பாட்டு தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

பயிற்சி கொமரண்ட் ஸ்ட்ரைக் பிரதி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களால் ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்கப்பட்டது. மேலும் மேம்படுத்தி பாகிஸ்தானின் பாதுகாப்பு இணைப்பாளரின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் நற்பணிகள் தொடர்பான திட்டங்களைப் பற்றி கலந்துரையாடப்பட்டது. பயிற்சிக் கொமரண்ட் ஸ்ட்ரைக் XI 2021 இன் தலைமை ஆலோசகர் பிரிகேடியர் சங்க ஜெயமஹா அவர்களும் உடனிருந்தார்.

இதற் கிடையில், கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய புதன்கிழமை (22) கூட்டு முப்படையின் மாபெரும் களப் பயிற்சியான பயிற்சி - கொமோரண்ட் ஸ்ட்ரைக் XI - 2021 யை பார்வையிட வந்த போது பிரதி பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, 65 வது படைப்பிரிவின் தளபதி ஆகியோர் வரவேற்றனர்

வருகை தந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 29 செப்டம்பர் 2021 இல் முடிவடையும் இந்த பயிற்சி நடவடிக்கைகளை நேரடியாக பார்யிட்டார்.