Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2021 12:45:09 Hours

இராணுவ நிருவாக கல்லூரியில் உபகரண மாஸ்டர் அதிகாரிகள் பாடநெறி எண் 04 ஆரம்பம்

இராணுவ தொண்டர் படையின் இருபத்தைந்து அதிகார ஆணைற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் உபகரண மாஸ்டர் அதிகாரிகளுக்கான பாடநெறி எண் – 04 திருகோணமலையில் உள்ள இராணுவ நிருவாக கல்லூரியில் 23 ஆகஸ்ட் 2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வின் போது இராணுவ நிருவாக கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜெயசேகர அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது. இதன்போது அதிகார ஆணையற்ற அதிகாரிகள் தங்களை பொதுப்பணி மாஸ்டர்களாக தங்களை மேம்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இப்பாடத்திட்டத்தில் முன்பிருந்த பாட்டத்திட்டத்திற்கு மேலதிகமாக தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழிக் கல்வி என்பனவும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அதன் பின்னர், இராணுவ நிருவாக கல்லூரியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேணல் வை.கே.எஸ்.ரங்கிக பாடத்திட்ட உள்ளீடுகள் மற்றும் அடுத்தக்கட்ட திட்டமிடல் செயற்பாடுகள் பற்றிய விளங்கங்களை வழங்கினார்.

செயற்பாடுகள் தொடர்பில் பதவி நிலை அதிகாரி I ( நி/பி)லெப்டினன் கேணல் பீ.ஜீ.ஆரியவன்ச அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள், பதவி நிலை அதிகாரி I, கல்லூரி உறுப்பினர்கள், நிரந்தர பணியாளர்க்ள மற்றும் சிரேஷ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.