Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2021 15:00:09 Hours

551 வது பிரிகேட் படையினரினால் மேலுமொரு தேவையுள்ள குடும்பமொன்றுக்கான வீட்டை நிர்மாணிக்க உதவி

வறியவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும் என்ற இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைய, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சனிக்கிழமை (11) நெல்லியடி பகுதியில் வசிக்கும் வறிய குடும்பமொன்றுக்கான வீட்டை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இத்திட்டத்திட்டமானது சமூக சேவகரும் நன்கொடையாளருமான திரு குமார வீரசூரிய அவர்களின் நிதி உதவியுடன் மற்றும் 551 வது பிரிகேடின் 4 வது இலங்கை சிங்கப் படையணி சிப்பாய்கள் கட்டுமானத்திற்கு அவசியமான மனிதவளத்தையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கினர். இப்பணிகள் லெப்டினன்ட் கேணல் எஸ். தசநாயக்க அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

இத்திட்டத்திற்கு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு மற்றும் 55 வது படைப்பிரிவு தளபதியும் பச்சைக்கொடி காட்டியிருந்த நிலையில் இதன்போது 551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக்க விக்கிரமசிங்க அவர்களினால், நெல்லியடி இமையாணண் திருமதி செல்வசன்னதி தர்ஷனிக்கு என்பவரது குடும்பத்திற்கான வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மேற்படி திட்டத்திற்கான நிதி உதவியில் திட்டத்திற்கு இணையாக இமயாணண் பகுதியில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்ட பின்னர் வாசவிலான் பகுதியிலுள்ள வறிய குடும்பங்களுக்கு 100 உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.