Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2021 12:30:53 Hours

நாட்டிற்கு ஆசிர்வாதம் வேண்டி யாழ்ப்பாணத்தில் மத வழிபாடு

நாட்டிலிருந்து கொவிட் – 19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டி நல்லூரிலுள்ள கைலாசநாதர் வடிவாம்பிகை சினம் கோவில் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள நாக விகாரையில் சனிக்கிழமை (09) தனித் தனியாக சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் வழிகாட்லின் கீழ் யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள பணியாளர்கள் இணைந்து மேற்படி வழிபாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர். பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இத்திட்டத்திற்கான அறிவுரை வழங்கப்பட்டது.

அதற்கமைய முதல் நாள் பூஜை வழிபாடுகள் யாழ்ப்பாணத்திலுள்ள கைலாசநாதர் வடிவாம்பினை சிவன் கோவிலில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. பின்னர், மாலையில், ஸ்ரீ நாகா விகாரை வளாகத்தில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் பங்கேற்புடன் இரவு முழுவதும் பிரீத் பாராயணம் செய்யப்பட்டு. மறு தினத்தில் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கபட்டது.