Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2021 08:02:53 Hours

கொவிட் – 19 வைரஸ் திரிபு பரவல் தொடர்பில் யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்

யாழ். தீபகற்பத்தில் கொவிட் -19 தொற்றுநோய் நிலைமை, கொவிட் -19 பரவல் தடுப்புச் செயற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் நன்மைகள் என்பன தொடர்பில் பொது மக்களை தெளிவூட்டும் விழிப்புணர்வு திட்டம் 51 வது படைப்பிரிவு சிப்பாய்களின் ஏற்பாட்டில் 2021 செப்டம்பர் 5-6 ஆம் திகதிகளில் பிரசார வாகனங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டம் கோப்பாய், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்,கீரிமலை பகுதிகளை அண்டி வசிக்கும் பொது மக்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. முகமூடிகளை சரியான முறையில் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி டெல்டா திரிபு பரவலை கட்டுப்படுத்தல் என்பன தொடர்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் யாழ். மாவட்ட கொவிட் -19 பரவல் தடுப்புச் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு மற்றும் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்லா ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் இடம்பெற்றது. இத்திட்டத்தில் டெல்டா திரிபு பரவலின் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து பாதுகாப்பு பெறும் முறை என்பது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.