Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சேதன பசளை உற்பத்தி தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவூட்டல்

முல்லைத்தீவு உதயர்கட்டுகுள விவசாய பயிற்றுவிப்பாளர் திருமதி சரண்யா செல்வராஜ் அவர்களினால் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளின் நலனுக்காக 'சேதன பசளை உற்பத்தி' என்ற தலைப்பில் உடையார்காட்டுக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.

இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கு அமைவான “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் மேற்படி திட்டம் 681 வது பிரிகேட் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி விழிப்புணர்வு செயலமர்வு 7 வது கெமுனு ஹேவா மற்றும் 9 இலங்கை தேசிய பாதுகாவர் படைச் சிப்பாய்களின் ஆதரவுடன் 681 பிரிகேடினரால் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 68 வது படைப்பிரிவின் படைத் தளபதி , அந்தந்த கட்டளை அதிகாரிகள் மற்றும் 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளீன் ஹெட்டியராச்சி ஆகியொரினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.