Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2021 18:30:38 Hours

இலங்கையில் ‘சர்வதேச யோகா தினத்தின்’ ஆரம்ப நிகழ்வு இராணுவ தலைமையகத்தில்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து நட்புறவு மற்றும் ஒத்துழைப்புத் தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும், உறவுகள் புதுப்பிக்கப்படுவதை அங்கிகரிக்கும் வகையிலும் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தில் 7 வது கட்ட சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (ஜூன் 21) ஆரம்ப நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களினதும் கௌரவ இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களினதும் உரைகள்

வீடியோ காட்சிகளாக ஔிபரப்பட்டதுடன், இலங்கை படையினரும் இந்திய உயர்ஸ்தானித்தவர்களும் இணைந்து இன்று காலை (21) யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே மற்றும் இலங்கையிலிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த விஷேட யோக பயிற்றுவிப்பாளர்கள் குழுவுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தார். இன்று காலை (21) தலைமையக வளாகத்திற்கான அவர்களின் வருகையை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெறவிருக்கும் வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வரவேற்பு உரையுடன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வாழத்து செய்தி அடங்கிய வீடியோ காட்சி ஔிபரப்பட்டதுடதையடுத்து இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களின் வாழ்த்து செய்தி அடங்கிய வீடியோவும் ஔிபரப்பட்டது. நிகழ்வின் வரவேற்புரையை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே அவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன் நிகழ்வின் சிறப்புரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமால் குணரத்ன அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் பழங்கால முறைமைகளை பின்பற்றி மனம் – உடல் நிலைமைகளை சீராக்கும் வகையிலான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இவ்வாறான தொடர்ச்சியான யோகா பயிற்சிகள் மூலம் கடந்த காலங்களில் இலங்கை இராணுவம் பயனடைந்துள்ளதோடு, வழக்கமான யோகா பயிற்சிகள் வீரர்களின் மன , உடல் வலிமைகளை மேம்படுத்த உதவியாக அமைந்திருந்தது.

வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இலங்கையின் இராணுவ தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வு மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் உறவை மேம்படுத்தல் மற்றும் பழைமையான இயற்பியல் மற்றும் கலை அம்சங்களை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே அவர்கள் நிகழ்வில் சுருக்கமான உரையினை நிகழ்த்தியிருந்ததுடன், இந்நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகரினால் இராணுவ தளபதிக்கும் இராணுவ தளபதியால் சிறப்பு விருந்தினருக்கும் சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேற்படி நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் பனாகொட இராணுவ தளத்திலும் வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஔிபரப்பட்டதுடன், ஏனைய சில இராணுவ தளங்களிலும் தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் பயிற்சிகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். அத்தோடு இராணுவ தலைமையகத்தில் 75 நிமிடங்கள் புத்துணர்ச்சியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு இறுதி கட்டத்தை அடைந்ததுடன், ஆரம்ப விழாவின் நேரடி காட்சிகள் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஆதரவோடு உலகம் முழுவதும் ஔிபரப்பட்டது. குறித்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தா கலாசார மையத்தின் பணிப்பாளர் கலாநிதி ரிவோன்ட் விக்ரம் சிங் மற்றும் புகழ்பெற்ற யோகா கலை நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்.

இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்ததோடு, அனைத்து நிகழ்வுகளின் போதும் சுகாதார நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை அறிவிப்பதற்கான முன்மொழிவை இந்திய பிரமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014 செப்டெம்பர் 27 அன்று ஐ.நா பொதுச் சபையில் ஆற்றிய உரையின் போது முன்வைத்திருந்துடன், அங்கு ஜூன் 21 ஐ சர்வதேச ஜோகா தினமாக அனுட்டிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டு ஐ.நா தூதுவர் அசோக் குமார் முகர்ஜி அவர்களால் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யோகா என்பது இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசாகும், இது மனம் மற்றும் உடலின் வலிமையை உள்ளடக்கியது. சிந்தனை மற்றும் செயல்திறன் கட்டுப்பாடு மற்றும் நிறைவு, மனிதனுக்கும் இயற்கையுக்கும் இடையிலான ஒருமைப்பாடு, மனிதகுலத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது.