Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th May 2021 07:30:00 Hours

இராணுவத் தளபதியின் 'வெற்றி தின’ செய்தியில் 58 ஆவது படைப் பிரிவின் பங்களிப்பை நினைவுபடுத்தினார்

நமது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பெறுவதற்காக (மே 18) நாளில் பயங்கரவாதத்தை தோற்கடித்து 12 ஆவது ஆண்டின் 'வெற்றி தினமான இன்றைய தினத்தை நினைவுகூருவதற்கான இந்த தருனத்தை பெருமையுடனும் கொரவத்துடனும் நான் எடுத்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் 58 ஆவது படைப் பிரிவின் தளபதியாக நான் இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க படையினருக்கு தலைமை வகித்ததோடு முழு தேசத்தையும் ஒன்றிணைக்க தலைமை வகித்தேன் என்பது குறிப்பிடதக்கவிடயமாகும்.

30 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்களும் சேதங்களும் விவரிக்க முடியாதவை மற்றும் மரக்க முடியாதவை, ஏனெனில் அனைத்து இலங்கையர்களும் மிருகத்தனமான போரின் தாக்கத்தை அனைத்து முனைகளிலும் சுமக்க வேண்டியிருந்தது.

அந்தந்த அரச போர் நிறுத்தங்கள் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ததன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்த போதிலும், அந்த நடவடிக்கைகள் தோல்வியுற்றன மற்றும் பல சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் இத்தகைய நடவடிக்கைகளை பயங்கரவாதிகள் மீறியதால், நாட்டை அனைத்து வகையிலும் பாதுகாக்க நாட்டின் ஆயுதப்படைகள் தள்ளப்பட்டனர்.

2006 ஜூலை இல் மாவிலாறு வாயில்கள் மூடப்பட்ட பின்னர், ஆயிரக்கணக்கானோர் தண்ணீரை இழந்ததால், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையின் தொடக்கத்திற்கு அது காரணமாயிருந்தது. செய்தியின் முழு உரையையும் இங்கே பின்வருமாறு: