Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2021 22:14:20 Hours

இராணுவத்தினால் தயார்படுத்தப்பட்ட இலவச கொவிட்-19 வைத்தியசாலை

கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சிறந்த அவசரகால சுகாதார சேவையை இலவசமாக வழங்குவதனை நோக்கமாக கொண்டு சீதுவவில் முதன்முதலில் அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையை திறப்பதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது. இதற்கான அனுசரனையானது பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு ஆஷ்ராஃப் அவர்களால் வழங்கப்பட்டது என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்துதல் பிரிவுகள், புத்துயிர் பெறும் பிரிவு ,அவசர சிகிச்சை பிரிவு , மருத்துவ கடைகள் போன்றவற்றைக் கொண்ட அதிநவீன வசதிகளை உள்ளடக்கியது இலங்கையில் இதுபோன்ற முதல் முறையாகும், நாட்டில் 3 வது கொவிட் -19 அலை மீண்டும் எழுந்ததை அடுத்து எந்தவொரு தற்செயலையும் எதிர்கொள்ளும் முகமாக இது ஒரு வாரத்திற்குள் இராணுவம் மேற்கொண்ட முயற்சியில் கொண்டுவரப்பட்டதோடு விரைவில் திறக்கப்பட்ட பின்னர் ஆரம்ப கட்டத்தில் 1200 நோயாளிகளுக்கு இடமளிக்கும் திறன் இந்த வைத்தியசாலை கொண்டுள்ளது.

"மோசமான நிலைக்கு வந்தால், நாங்கள் எங்கள் முகாம்களில் உள்ள அனைத்து படுக்கை கட்டில்களையும் கொடுத்து வெளியில் உள்ள மரங்களுக்கு அடியில் தங்கியிருந்து அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவோம், மேலும் ஒரு கொவிட்-19 நோயாளி தரையில் படுத்துக் கொள்ளும் அளவிற்கு அவர்களை விடமாட்டோம். சீதுவவில் இந்த மேம்படுத்தப்பட்ட புதிய கொவிட்-19 வைத்தியசாலையில் இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட 1200 படுக்கை கட்டில்கள் பொருத்தப்பட்டிருக்கும், நாங்கள் முதன்மையாக 5000 படுக்கைகளை தயார் செய்வோம், அடுத்த இரண்டு நாட்களுக்குள் அதை நாடு முழுவதும் 10,000 படுக்கைகளாக உயர்த்துவதே எமது இலக்கு. இந்த இடத்தில், அவசர அடிப்படையில் தனி அறைகள் மற்றும் இடங்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளைக் கொண்டு 1200 நோயாளிகளை சமாளிக்க முடியும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

சீதுவ தொழிற்சாலை வளாகமானது பிரன்டெக்ஸ் நிறுவனத்தினால் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்காக வழங்கப்பட்ட மூன்றாவது இடமாகும். இதற்கு முன்னதாக பூனானி மற்றும் ரம்புக்கனை தொழிற்சாலைகளை இந்த உன்னத காரியத்திற்காக வழங்கி்யுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனமானது சர்வதேச அங்கிகாரம் பெற்ற லீ்ட் பிலன்டியம் சான்றிதழ் பெற்ற ஆடை உற்பத்தி நிறுவனமாகும்.

நாட்டின் மிகப் பெரிய மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலை நிறைவு குறித்து ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் சுட்டிக்காட்டியதாவது, இராணுவம் ஏற்கனவே வைத்தியசாலை, இடைநிலை பராமரிப்பு மையங்களில் அதிக படுக்கைகளை வழங்கியுள்ளதோடு அவசர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகளை கூட வழங்கியுள்ளது.

நட்டிலுள்ள அரசவைத்தியசாலைகளில் உள்ள 86,000 படுக்கை கட்டில்களில் , ஆரம்பத்தில் கொவிட்-19 நோயாளிகளின் திறன் குறைவாக உள்ளமையினால் நாங்கள் சுமார் 5000 படுக்கை கட்டில்களை மட்டுமே பயன்படுத்தினோம், எவ்வாறாயினும், ஆரம்ப கட்டத்தில் சுமார் 3000-3500 படுக்கைகளை இராணுவம் வழங்கியது. "ஆயினும், இது போன்ற மேம்பட்ட வைத்தியசாலைகளை நிறுவுவது நெரிசலையும், மேலும் மேலும் பாதிக்கப்பட்டவர்களைப் பெறும் திறனையும் குறைக்கும். நாங்கள் படுக்கைகள் குறைவாக வழங்கமாட்டோம் அது எப்படியாவது அல்லது வேறு வழியில் வழங்கப்படும் என்று "ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக் காட்டினார்.