04th May 2021 14:05:37 Hours
புராதன நகரமான பொலன்னருவை கல் விகாரைக்கும் திவங்க பிலிகேக்கும் (சிற்ப மாளிகை) இடையில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் பராக்கிரமபாகு மன்னனால் கட்டுவிக்கப்பட்ட 'தேமல மஹா சேய', கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச படையினரின் ஒத்துழைப்புடன் மே தினத்தில் (1) புனரமைக்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியா மற்றும் கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட முழு நாள் திட்டத்தை பணியாளர் கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச பதவி நிலை அதிகாரி 1 (நிர்வாகம்) லெப்டினன்ட் கர்னல் நந்ததிலக மேற்பார்வை செய்தார்.