04th May 2021 14:02:50 Hours
இன்று காலை (04) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1923 நபர்களுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 09 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் எஞ்சிய 1913 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர் இதில் கொழும்பிலிருந்து 529 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 264 பேரும், கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 232 பேரும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 888 பேரும் அடங்குவர் என கொவிட் பரவரலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் கூறுகிறது.
இன்று காலை (04) மீன் சந்தை மற்றும் மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணி (90,637 ) இறந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்தும் இனங்காணப்பட்டவர்களின் மொத்தம் 113,675 ஆகும். அவர்களில் 98,209 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 14,757 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 967 நோயாளிகள் பூரணமாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 13 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி இன்று காலை (04) நாட்டில் மொத்த கொவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கை 709 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை(04) நிலவரப்படி, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 110 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,981 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (04) காலை வரை குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசம், திட்டவெல்கம, கும்புக் கெட்டே நிரவிய நிக்கதலுபொத மற்றும் உடுபதலாவ ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் , ஆதிகாரிகொட, மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு , பெலவத்த கிழக்கு பொல்லுன்ன, இங்குறுதலுவ, மீதலான, மொரப்பிட்டிய, பிலித, அதிகல்ல, மொரப்பிட்டிய வடக்கு, வெல்லவிட்ட தெற்கு, மக்கலந்தவ, போதலாவ, கட்டுகெலே , வெல்மேகொட, பாஹல ஹேவஸ்ஸ ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் களுத்துறை மாவட்டத்திலும் கம்பாஹா மாவட்டத்தில் பொல்ஹேன ஹீரகுலகெதர களுஹங்கல அஸ்வென்னவத்தை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் பூம்புஹார், சுமைதாங்கிபுரம் (உப்புவெலி), மூதூர், கோவிலடி, லிங்கநகர், காவெட்டிகுடா, ஓஸ்ஹில் அன்புவலிபுரம் மற்றும் சீனக்குடா கிராம சேவையாளர் பிரிவுகளும், காலி மாவட்டத்தில் இம்புலகட ,கடுதம்பே, கொடஹேன மற்றும் தல்கஸ்கொட கிராம சேவையாளர் பிரிவுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் சிரிகெத மற்றும் சருபிம கிராம சேவையாளர் பிரிவும். மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை, கலேவல மற்றும் தம்புள்ள பொலிஸ் பிரிவுகளும் தம்புள்ள பொருளாதார மையம். பல்லேக்கும்புர ,அளுகொல்ல கிராம சேவையாளர் பிரிவுகளும் அம்பாறை மாவட்டத்தில் வெல்லவாய நகரம், குமரிகம, தெஹிஹத்தகண்டிய மற்றும் கதிரபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளும், மொனராகல மாவட்டத்தில் வெல்லவாய ,வேரயாய, கொட்டம்கம்பொக்க ரஹதன்கம, கல்அமுன மற்றும் எலமுல்ல கிராம சேவையாளர் பிரிவுகளும், கொழும்பு மாவட்டத்தில் நம்பானுவ தம்பே, பட்டகெத்தர வடக்கு, பெவன்வத்த மேற்கு, பெலனவத்த கிழக்கு, கெஸ்பேவ தெற்கு, மாகந்தன கிழக்கு, மாவித்தர வடக்கு, மாதபத மற்றும் கொரக்கபிட்டிய சேவையாளர் பிரிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஹபுகொட கிராம சேவையாளர் பிரிவும் நுவரெலியா மாவட்டத்தில் நில்தண்டாஹின்ன கிராம சேவையாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் திசவீரசிங்கம் பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளன.