Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2021 18:44:04 Hours

வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ 13 வது தேசிய பாதுகாவல் படையினரால் கட்டுப்பாட்டிற்கு

முல்லைத்தீவு ஒடுசுட்டான் முத்துஐயன்கட்டு பிரதேச வர்த்தக நிலையத்தில் வியாழக்கிழமை (29) திடீரென ஏற்பட்ட தீயினை 64 வது படைப்பிரிவின் 13 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் படையினரால் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

643 வது பிரிகேட் தளபதி கர்னல் டிரால் டி சில்வாவின் மேற்பார்வையில் 13 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையினர் உடனடி நடவடிக்கை எடுத்து தீயினை அணைத்தனர். அப்பகுதி கிராம மக்களும் தீயை அணைக்க பங்களித்தனர்.