Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2021 15:23:26 Hours

கொவிட் -19 கட்டுப்பாடு குறித்த பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற்றது

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (29) கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு குட்டம் மாவட்டச் செயலாளர் திரு. டபிள்யூ.ஏ தர்மசிறி மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய ஆகியோரின் பங்குப்பற்றலில் இடம்பெற்றது.

தொற்றுநோயின் தற்போதைய 3 வது அலைக்கு முகங்கொடுக்கும் வகையில் பொலன்னறுவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர், மற்றும் மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அரசு மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டார்.

வைரஸின் தற்போதைய விரைவான பரவலைத் தணிக்க பாதுகாப்புப் படைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், சிகிச்சை மையங்களை அதிகரிப்பதற்கும், அவசர தேவைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்ற போதுமான உபகரணங்கள் வழங்குதல் தொடர்பாகவும் எடுத்துக்காட்டப்பட்டது.

மாநாட்டில் பொலன்னறுவை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.