Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2021 18:50:00 Hours

முழங்காவில் பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி ஆரம்பம்

முழங்காவில் பட்டாலியன் பயிற்சி பாடசாலையின் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி செவ்வாய்க்கிழமை (27) சுருக்கமான விழாவின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது, நிகழ்வின் பிரதம அதிதியாக 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு தொடக்க உரையினை நிகழ்த்தினார்.

'இலங்கை இராணுவ முன்னோக்கு மூலோபாயம் - 2020-2025' க்கு இணங்க, 2021 ஆம் ஆண்டில் இராணுவ நித்திய மற்றும் தொண்டர் படைகளுக்கு ஐந்து இலக்க எண்ணிக்கையிலான தொழில்துறை மற்றும் தொழில்துறை அல்லாதவர்கள் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான முயற்சியை இராணுவம் தொடங்கியுள்ளது.

288 பேருக்கான புதிய பயிற்சி பாடநெறி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 65 வது படைப்பிரிவு தளபதி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக நான்கு மாதங்களுக்கு தொடரும்.

இப்பயிற்சிக் குழுவில் இலங்கை இராணுவ இயந்திரவியல் காலாட் படையின் 11 பேர், இலங்கை இராணுவ கமாண்டோ படையின் 103 பேர், இலங்கை இராணுவ சிறப்புப் படையின் 109 பேர், இராணுவ புலனாய்வுப் படையின் 54 பேர் மற்றும் இலங்கை இராணுவ தேசிய பாதுகாவல் படையின் 11 பேர் உள்ளடங்குகின்றனர்.