Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st May 2021 21:30:21 Hours

கொவிட் பரவலைத் தடுக்கும் செயலணி தலைவர் தெரண தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில்

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட வைத்தியர் குழு, கீல் பல்கலைக்கழகத்தின் வைத்திய அறிவியல் மற்றும் சுகாதார அறிவியல் பீடத்தின் பேராசிரியர் அதுல சுமதிபால ஆகியோர் , புதன்கிழமை (28) மாலை தெரண தொலைக்காட்சியின் 'ஆலுத் பர்லிமெந்துவ', எனும் கலந்திரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கொவிட் 19 காரணமாக தனிமைப்படுத்தல் , பரிமாற்றத்தின் நிலை, தடுப்பு சுகாதார நடைமுறைகளின் தேவை மற்றும் கொவிட் அதிகரிப்பைத் தணிப்பது எப்படி என்பதற்கான புதிய சாதகங்கள் நிகழ்வுகளின் தோற்றம், முன்னோக்குகள், ஆர்வங்கள் மற்றும் கட்டாய நடைமுறைகள் நோயாளிகள் முதலியன பற்றிய விரிவான விவரங்கள் விவாதிக்கப்பட்டன..