Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2021 12:17:10 Hours

தொழில்முனைவோர் கிரீன் கார்ட் பாடநெறியினை பூர்திசெய்த இராணுவ வீரர்கள்

முதன்முதலில் இலங்கையில் 'எம் 2 சி இராணுவத்தின் இணை தொழில்முனைவோர் கிரீன் கார்ட் பாடநெறியினை பூர்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (5) மாலை கொழும்பின் 'ACCESS' கோபுரத்தில் நடைபெற்றது.

இப் பாடநெறியினை அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்கள் (18), ஏர் வைஸ் மார்ஷல்ஸ் (2), ரியர் அட்மிரல்ஸ் (3) மற்றும் கொமடோர்ஸ் (2) உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் பூர்த்திசெய்தனர்.

ஜெனரல் தயா ரத்நாயக்க அவர்களின் (ஓய்வு) அழைப்பின் பேரில், பாதுகாப்புப் பதவி நிலை அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பயிற்சி நெறிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பிரதம ஆலோசகர் திரு லலித் வீரதுங்க அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் கடற்படை , விமானப்படை தளபதிகளும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.

எதிர்காலத்தில் இராணுவ வீரர்களின் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பாக வீரர்களின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக திறன்கள், திறமைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையிலான அவர்களின் உயர்வுகளுக்கு உகந்ததாக இந்த பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சர்வதேச பொது முகாமைத்துவ சங்கத்தின் முன்னாள் மாணவரும், அமெரிக்காவின் இலங்கைக்கான மனித உரிமைகள் அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு ரஜீவ குலதுங்க அவர்களும், கலாநிதி தினேஷ் வட்டவன, கலாநிதி பெரீரா பராக் பரூக் , ஓமார் கான், பிரட்லி எமர்ஸன், குமார கலஹேன்கே மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு) ஆகியோரும் பயிற்சி நெறியில் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

தொழில் வான்மை நெறிமுறைகள் மற்றும் மூலோபாய சிந்தனைகள், மனித வளங்களை நிர்வகித்தல் மற்றும் தொழில்சார் நிகழ்ச்சி நிரல்களை ஏற்பாடு செய்தல் தொழில்நுட்ப சூழல் மற்றும் அறிவு பறிமாற்றத்தின் உச்ச கட்டத்தை எட்ட வழி செய்வதுடன் போட்டி சூழலில் திறமைகளை வெளிக்காட்டு ஊக்குவிப்பை வழங்குவதாகவும் மேற்படி பாட நெறி அமைந்துள்ளது.

சர்தேச மனித வள முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து இராணுவத்துக்கான M2C தொழில் முறை சான்றிதழ் வழங்கும் எக்ஸஸ் பொறியியல் தனியார் நிறுவனத்தின் தலைவர் திரு சுமல் பெரேரா ஆகியோரின் நிர்வகிப்பில், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எம் 2 சி அல்லது இராணுவத்தின் ஒன்றுபட்ட பரிமாற்ற எண்ணக்கருவானது முதன்முதலில் இலங்கை இராணுவ தொண்டர் படைக்காக புதிய மூலோபாய உருமாற்ற கட்டமைப்பில் சர்தேச மனித வள முகாமைத்துவ ரஞ்சீவா குலதுங்க மற்றும் டொக்டர் தினேஷ் வட்டவன ஆகியோருடன் இணைந்து ஜெனரல் தயா ரத்நாயக்க அலுவலகத்தில் முன்மொழிந்தார்.

அழைப்பு விடுக்கப்பட்ட முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். best shoes | Air Max