Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2021 16:02:10 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தளபதியின் பதவியேற்பு

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா மத்திய பாதுகாப்பு படைகளின் புதிய தளபதியாக புதன்கிழமை 24 தியதலாவையிலுள்ள படைத் தலைமையகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

மத்திய பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபத்திரண ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையிலேயே புதிய தளபதி பதவியேற்றுள்ளார்.

இதன்போது தலைமையக வளாகத்துக்கு வருகைதந்த தளபதிக்கு சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டதுடன் சமய அனுட்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து இடம்பெற்ற உரையில் விளக்கமளித்த மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா இராணுவத்தின் மேம்பாட்டிற்காக ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரம் ஒன்றிலும் தளபதி கலந்துகொண்டார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் முன்பாக அவர் கொழும்பிலுள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது படைப் பரிவின் படைத் தளபதியாகவும் இராணுவத் தலைமையகத்தின் மேற்பார்வை பாதுகாப்பு தளபதியாகவும் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில், 11 வது படைப்பிரிவு, 12 வது படைப்பிரிவு, 111, 112, 121,122வது பிரிகேட்களின் தளபதிகள் மற்றும் பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டு தளபதியை வாழ்த்தினர். Nike air jordan Sneakers | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff